Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஸ்மார்ட் ஃபோன்களுக்கு வரி விலக்கு!

T

The Leader Desk

ஏப்ரல் 12, 2025 • 5:03 PM

ஸ்மார்ட் ஃபோன்களுக்கு வரி விலக்கு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகளுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், விலக்கு அளித்துள்ளது.
  • இந்தநிலையில், ஏப்ரல் 2 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட பரஸ்பர கட்டணங்களின் ஒரு பகுதியாக இல்லாத 20 வீத வரியால் சீனாவிலிருந்து தொழில்நுட்ப இறக்குமதிகள் இன்னும் பாதிக்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
  • இதற்கிடையில் வரி விதிப்புக் கட்டணங்களின் பாதிப்பு நுகர்வோருக்கு சென்றிருக்குமானால், அமெரிக்காவில் ஐபோன் விலைகள் மற்றும் பிற மின்னணு பொருட்கள் மூன்று மடங்கு அதிகரித்திருக்கும் என்று சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
  • அமெரிக்காவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள எப்பிளின் ஐபோன்களில் 80வீதமானவை சீனாவில் தயாரிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள 20வீதமானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாகும்.
எழுத்து அளவு:

ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகளுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், விலக்கு அளித்துள்ளது.

குறித்த பொருட்களின் விலை உயரக்கூடும் என்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் அவற்றில் பல சீனாவில் தயாரிக்கப்படுகின்றன.

இதன்படி குறைக்கடத்திகள் சூரிய மின்கலங்கள் மற்றும் மெமரி அட்டைகள் உள்ளிட்ட பிற மின்னணு சாதனங்கள் இந்த விலக்குகளில் அடங்குகின்றன.

இந்தநிலையில், ஏப்ரல் 2 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட பரஸ்பர கட்டணங்களின் ஒரு பகுதியாக இல்லாத 20 வீத வரியால் சீனாவிலிருந்து தொழில்நுட்ப இறக்குமதிகள் இன்னும் பாதிக்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதற்கிடையில் வரி விதிப்புக் கட்டணங்களின் பாதிப்பு நுகர்வோருக்கு சென்றிருக்குமானால், அமெரிக்காவில் ஐபோன் விலைகள் மற்றும் பிற மின்னணு பொருட்கள் மூன்று மடங்கு அதிகரித்திருக்கும் என்று சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா ஐபோன்களுக்கான முக்கிய சந்தையாக உள்ளது, அதே நேரத்தில் கடந்த ஆண்டு எப்பிள் அதன் ஸ்மார்ட்போன் விற்பனையில் பாதிக்கும் மேலானது அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளதாக கவுண்டர்பொயிண்ட் ரிசர்ச் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள எப்பிளின் ஐபோன்களில் 80வீதமானவை சீனாவில் தயாரிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள 20வீதமானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாகும்.

இதேவேளை சம்சங் போன்ற ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுடன் சேர்ந்து, எப்பிள் நிறுவனம், சீனாவை அதிகமாக நம்பியிருப்பதைத் தவிர்க்க அதன் விநியோகச் சங்கிலிகளை பல்வகைப்படுத்த முயற்சித்து வருகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...