Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

‘புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி தீக்கிரையாக்கப்பட்ட போது கூட மின் துண்டிக்கப்படவில்லை’

T

The Leader Desk

பிப்ரவரி 12, 2025 • 4:07 AM

‘புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி தீக்கிரையாக்கப்பட்ட போது கூட மின் துண்டிக்கப்படவில்லை’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தீயிட்டு கொழுத்திய போது கூட, நாடளாவிய ரீதியில் மின்துண்டிக்கப்படவில்லை.
  • ,000 மெகாவோல்ட் கொண்ட மின் பிறப்பாக்கி விடுதலைப் புலிகளால் தீ வைக்கப்பட்ட போது கூட இவ்வாறு தேசியளவில் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை.
  • தற்போது ஆட்சியிலிருந்து கொண்டும் இதனையே கூறுகின்றனர்.
எழுத்து அளவு:

தீயிட்டு கொழுத்திய போது கூட, நாடளாவிய ரீதியில் மின்துண்டிக்கப்படவில்லை. அவ்வாறிக்கையில், குரங்கின் மீது பழி சுமத்தி குரங்கு சேட்டைகள் காண்பிக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஞாயிறன்று ஏற்பட்ட மின்தடைக்கு மின்சக்தி அமைச்சர் குரங்குகள் மீது பழி சுமத்தினார். 33,000 மெகாவோல்ட் கொண்ட மின் பிறப்பாக்கி விடுதலைப் புலிகளால் தீ வைக்கப்பட்ட போது கூட இவ்வாறு தேசியளவில் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. அவ்வாறிருக்கையில், ஒரு குரங்கால் முழு நாட்டுக்கும் மின் துண்டிப்பை ஏற்படுத்த முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

கடந்த அரசாங்கங்களின் குறைக் கூறியே இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தற்போது ஆட்சியிலிருந்து கொண்டும் இதனையே கூறுகின்றனர். நுரைச்சோலை நிலக்கரி மின்உற்பத்தி நிலையத்திலுள்ள மின் பிறப்பாக்கிகள் செயலிழந்தமையால் இந்நிலைமை ஏற்பட்டது எனக் கூறினர்.

கடந்த காலங்களில் நுரைச்சோலை மின் பிறப்பாக்கிகள் செயலிழந்த சந்தர்ப்பங்களில், அது தொழிற்சங்க மாபியாக்களின் செயல் என விமர்சித்தனர்.

அவ்வாறெனில் இந்த அரசாங்கத்துக்கும் அந்த மாபியாக்களை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதா? இந்த மாபியாக்களின் தேவைக்கேற்ப செயற்படுவதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளதா?

நுரைச்சோலை மின்பிறப்பாக்கிகள் செயலிழக்கப் போவதை அறிந்தே அரசாங்கம் அதற்கு இடமளித்திருக்கிறது. இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...