Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

‘மஹிந்தவின் வீட்டு முன் போராடத் தேவையில்லை: கடிதம் அனுப்பினால் வெளியேறுவார்’

T

The Leader Desk

பிப்ரவரி 12, 2025 • 3:40 AM

‘மஹிந்தவின் வீட்டு முன் போராடத் தேவையில்லை: கடிதம் அனுப்பினால் வெளியேறுவார்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வேண்டுமென்று, சிவில் அமைப்பினர் குறிப்பிட வேண்டியதில்லை.
  • கடந்த அரசாங்கங்களின் நிர்வாகத்தை விமர்சித்தே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது.
  • வீட்டுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட வேண்டிய தேவையுமில்லை.
எழுத்து அளவு:

வேண்டுமென்று, சிவில் அமைப்பினர் குறிப்பிட வேண்டியதில்லை. வீட்டுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட வேண்டிய தேவையுமில்லை. அரசாங்கம், சட்டத்தின் பிரகாரம் உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பினால், மஹிந்த ராஜபக்ஷ வீட்டை விட்டு வெளியேறுவார்” என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அமோக வெற்றிப் பெறுவோம். தொகுதி மற்றும் ஆசன மட்டத்தில் தேர்தல் பிரச்சார கூட்டங்களை எதிர்வரும் மாதம் முதல் நடத்துவோம். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை கிராமத்துக்கு கிராமம் எடுத்துரைப்போம்.

கடந்த அரசாங்கங்களின் நிர்வாகத்தை விமர்சித்தே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது.

ஆகவே இப்போதும் கடந்த காலத்தை போன்று போலியான குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருக்காமல் சிறந்த முறையில் செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம்.

தேங்காய் தட்டுப்பாட்டுக்குக்கும், மின்விநியோக துண்டிப்புக்கும் குரங்குகள் மீது அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது.

மின்சாரத்துறை அமைச்சரின் பொறுப்பற்ற கூற்று அரசாங்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ அரச இல்லத்தில் இருந்து வெளியேறுமாறு சிவில் அமைப்பினர் குறிப்பிட வேண்டியதில்லை. வீட்டுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட வேண்டிய தேவையுமில்லை.

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் சட்டத்தின் பிரகாரம் உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பினால் மஹிந்த ராஜபக்ஷ வீட்டை விட்டு வெளியேறுவார் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...