Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

கொவிட்: ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 12 குழந்தைகள் இறப்பு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 21, 2021 • 1:24 PM

கொவிட்: ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 12 குழந்தைகள் இறப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு ஒவ்வொரு நாளும் 25 முதல் 30 குழந்தைகள் வரை கொவிட் நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவதாக வைத்தியர் விஜேசூரிய தெரிவித்தார்.
  • இது குறித்து பணிப்பாளர் மேலும் கூறியதாவது: 50 க்கும் மேற்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் "தற்போது, ​​வைத்தியசாலையின் 50 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், நாங்கள் அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக வைத்திருக்கிறோம்.
  • எனவே, பொது மக்கள் சுகாதார மற்றும் பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எழுத்து அளவு:

லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு ஒவ்வொரு நாளும் 25 முதல் 30 குழந்தைகள் வரை கொவிட் நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவதாக வைத்தியர் விஜேசூரிய தெரிவித்தார்.

வைத்தியசாலையின் ஊழியர்களில் பலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பலருக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் நிபுணர் கூறினார்.

இது குறித்து பணிப்பாளர் மேலும் கூறியதாவது:

50 க்கும் மேற்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

"தற்போது, ​​வைத்தியசாலையின் 50 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், நாங்கள் அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக வைத்திருக்கிறோம். நோய் பரவுவது உச்சத்தை அடைந்துள்ளது.

இந்த நேரத்தில் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இந்த நோய் சிறு குழந்தைகளுக்கு பெற்றோர் மற்றும் பெரியவர்கள் மூலம் பரவுகிறது. எனவே, பொது மக்கள் சுகாதார மற்றும் பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மருத்துவ ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு வைட்டமின்கள் கொடுக்காதீர்கள்!

சிறு குழந்தைகளுக்கு தேவையில்லாமல் பி வைட்டமின்கள் நோய்களிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக கொடுக்கப்படுவதாக எங்களுக்குத் தகவல்கள் வந்துள்ளன.

உண்மையில், இது போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று நாங்கள் உங்களை வலியுறுத்துகிறோம். சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமல் இதுபோன்ற மருந்துகளை கொடுக்காதீர்கள்.

ஒரு குழந்தைக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட எந்த குழந்தையையும் நாங்கள் திருப்பி அனுப்பவில்லை.

(மவ்பிம)

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...