Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

லசந்த விக்கிரமதுங்கவின் 12வது நினைவேந்தல் மட்டக்களப்பில்!

T

The Leader Desk

ஜனவரி 8, 2022 • 3:43 PM

லசந்த விக்கிரமதுங்கவின் 12வது நினைவேந்தல் மட்டக்களப்பில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ம் ஆண்டிலே ஜனாதிபதியாக இருக்கும் அவர்தான் அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்தவர்.
  • அவர் 2009 ம் ஆண்டு லசந்த விக்கிரமசிங்க கொல்லப்பட்டதன் பிறகு கொடுத்த போட்டி ஒன்றை பார்த்திருந்தேன் அப்போது யார் இந்த லசந்த என்று கேட்டிருந்தார்.
  • ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கு பல அச்சுறுத்தல் இருக்கும் காலப்பகுதியில் அப்படியான காலப்பகுதியில் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் லசந்த மட்டுமல்ல 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் இவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்.
எழுத்து அளவு:

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லசந்த விக்கிரமதுங்கவின் 12வது நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”கொழும்பிலே இருக்கும் பல ஊடகங்கள் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பத்திரியையாளர்களை அரசு தமது வியாபாரிகளை விட்டு அனைத்தையும் கைப்பற்றும் சில நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதுடன் பல சிரேஷ்ட ஊடகவியலாள்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை விடுத்து நீங்கள் இவ்வாறான வேலைகளை தொடர்ச்சியாக செய்வீர்களானால் உங்களை வேலையில் இருந்து நீக்கவேண்டிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம்.

2022 ம் ஆண்டிலே ஜனாதிபதியாக இருக்கும் அவர்தான் அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்தவர். அவர் 2009 ம் ஆண்டு லசந்த விக்கிரமசிங்க கொல்லப்பட்டதன் பிறகு கொடுத்த போட்டி ஒன்றை பார்த்திருந்தேன் அப்போது யார் இந்த லசந்த என்று கேட்டிருந்தார்.

எனக்கும் அவருக்கும் எதுவித பிரச்சனையும் இல்லை ஆனால் அவருக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்ய இருக்கின்றேன் என்றவர் தான் இன்று நாட்டிலே ஜனாதிபதியாக இருக்கின்றார். அவருக்காக வழக்கு பேசிய அலி சப்ரி தான் இந்த நாட்டிலே நீதி அமைச்சராக இருக்கின்றார்.

ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கு பல அச்சுறுத்தல் இருக்கும் காலப்பகுதியில் அப்படியான காலப்பகுதியில் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் லசந்த மட்டுமல்ல 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் இவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். அதேவேளை பொலிசாரால் லசந்த கொலை தொடார்பாக வழக்கு தொடரவில்லை.

இருந்தபோதும் நல்லாட்சி அரசாங்கத்தில் கூட அந்த வழக்கை ஆரம்பித்தாலும் அதை திருப்திகரமான முடிவை எந்த அரசாங்கமாக இருந்தாலும் பெற முடியவில்லை என்பது கவலையான விடையம்.

எனவே இனிவரும் காலங்களிலாவது படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் கொலை செய்யப்பட்டவர்களுக்கு அரசாங்காத்தாலே நீதிமன்றத்தாலே தண்டனை வழங்காவிட்டாலும் இறைவன் தண்டணை வழங்குவான்” என தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...