Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

‘இராணுவத்தால் விரட்டியடிக்கப்பட்டவர்தான் தப்பிச் செல்ல முயன்று குளத்தில் மூழ்கிப் பலியானார்!’

T

The Leader Desk

ஆகஸ்ட் 11, 2025 • 2:55 AM

‘இராணுவத்தால் விரட்டியடிக்கப்பட்டவர்தான் தப்பிச் செல்ல முயன்று குளத்தில் மூழ்கிப் பலியானார்!’

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன்போது, 07.08.2025 ஆம் திகதியன்று இரவு வேளையில் அகற்றப்பட்ட இரும்பு மற்றும் வெளிப்புறப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக அதன் முகாம் வளாகத்தினுள் அனுமதியின்றி நுழைந்த ஐந்து பேரை விரட்டியடிப்பதற்காக முகாமிலுள்ள உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
  • அவர்கள் மூவரையும் 09.08.2025 ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
  • மூன்று சந்தேகநபர்களையும் 19.08.2025 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

முத்துஐயன்கட்டுக் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர், நீரில் மூழ்கியே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

"முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தின் சிவநகரில் பிரதேசத்தில் அமைந்துள்ள 12 ஆவது சிங்கப் படையணி முகாமை அப்புறப்படுத்துவதற்குச் சில நாள்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது, 07.08.2025 ஆம் திகதியன்று இரவு வேளையில் அகற்றப்பட்ட இரும்பு மற்றும் வெளிப்புறப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக அதன் முகாம் வளாகத்தினுள் அனுமதியின்றி நுழைந்த ஐந்து பேரை விரட்டியடிப்பதற்காக முகாமிலுள்ள உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்தனர். அதில் தப்பிச் செல்ல முயன்ற ஒருவர் முத்துஐயன்கட்டுக் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வடக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய பொலிஸ் விசேட குழுவால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்படி நபர்கள் முகாம் வளாகத்தினுள் நுழைந்தபோது, முகாமிலுள்ள உத்தியோகத்தர்கள் அவர்களைக் கண்டு விரட்டியடிக்க முற்பட்ட போது, இதன் விளைவாக, உள்ளே நுழைந்தவர்கள் தாக்கப்பட்டது தெரியவந்ததன் காரணமாக சிப்பாய் ஒருவரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், முகாமுக்குள் நுழைந்து திருட்டுச் சம்பவத்தை மேற்கொள்வதற்காக இந்தக் குழுவுக்கு உதவிய மேலும் இரண்டு சிப்பாய்களும் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரையும் 09.08.2025 ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். மூன்று சந்தேகநபர்களையும் 19.08.2025 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலம் தொடர்பாக வெளிப்படையான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் எந்தவித செல்வாக்கும் இல்லாமல், வெளிப்படையாகவும், பாரபட்சமின்றியும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், ஒட்டுசுட்டான் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்." - என்றுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...