Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

4ஆவது மதிப்பாய்வு வெற்றி: பட்ஜெட் வரம்புகளுக்குள் செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது IMF!

T

The Leader Desk

ஏப்ரல் 11, 2025 • 9:00 AM

4ஆவது மதிப்பாய்வு வெற்றி: பட்ஜெட் வரம்புகளுக்குள் செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது IMF!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மதிப்பாய்வு வெற்றிகரமாக இருந்ததாகவும், எதிர்கால ஒப்பந்தங்கள் மிக விரைவில் எட்டப்படும் என்றும் இன்று அறிவிக்கப்பட்டது.
  • அதன்படி, பணியாளர் ஒப்பந்தங்களை எட்டுவது குறித்து விவாதிக்க, இலங்கை பிரதிநிதிகள் குழு 16ஆம் திகதியன்று அமெரிக்காவிற்கு புறப்பட உள்ளது.
  • அத்துடன், உலகளாவிய அதிர்ச்சிகளின் தாக்கத்தை இலங்கையில் மதிப்பிடுவதற்கு மேலும் காலம் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

மதிப்பாய்வு வெற்றிகரமாக இருந்ததாகவும், எதிர்கால ஒப்பந்தங்கள் மிக விரைவில் எட்டப்படும் என்றும் இன்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பணியாளர் ஒப்பந்தங்களை எட்டுவது குறித்து விவாதிக்க, இலங்கை பிரதிநிதிகள் குழு 16ஆம் திகதியன்று அமெரிக்காவிற்கு புறப்பட உள்ளது.

அத்துடன், உலகளாவிய அதிர்ச்சிகளின் தாக்கத்தை இலங்கையில் மதிப்பிடுவதற்கு மேலும் காலம் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான விஜயத்தை முடித்த பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட தூதுக்குழுவின் தலைவர் இவான் பபாஜியோர்ஜியோ தலைமையிலான குழு இந்தக் கருத்தை வெளியிட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் பொருளாதார மற்றும் நிதிக் கொள்கைகளை செயல்படுத்துவதில் உள்ள முன்னேற்றம் மற்றும் சமீபத்திய பேரண்ட பொருளாதார போக்குகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்தக் குழு கடந்த 3ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்தது.

அதன்படி, தமது தூதுக்குழு பணியை முடித்துக்கொண்டு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள அந்த குழு, சமீபத்திய வெளிப்புற அதிர்ச்சிகளும் நாளாந்தம் வளர்ந்து வரும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளும், தொடர்ந்து வழமைக்கு திரும்பி வரும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உலகளாவிய அதிர்ச்சியின் தாக்கத்தையும், இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் மதிப்பிடுவதற்கு மேலதிக காலம் தேவை என்றும் அந்த தூதுக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...