Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கு விசேட அறிவித்தல்!

T

The Leader Desk

ஏப்ரல் 11, 2025 • 3:09 AM

சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கு விசேட அறிவித்தல்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று (11) முதல் விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • இதற்காக 10 விசேட ரயில்கள் சேவையில் சேர்க்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.
  • அதன்படி, இன்று இரவு 7.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு ஒரு விசேட ரயில் இயக்கப்படும், அதே நேரத்தில், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் ரயில் ஒன்று பயணிக்கவுள்ளது.
  • மேலும், இன்று இரவு 7.20 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து காலிக்கு ஒரு விசேட ரயில் இயக்கப்படும், அதே நேரத்தில் காலியில் இருந்து கொழும்பு கோட்டைக்கு ரயில் ஒன்று இயக்கப்படவுள்ளது.
எழுத்து அளவு:

இன்று (11) முதல் விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக 10 விசேட ரயில்கள் சேவையில் சேர்க்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

அதன்படி, இன்று இரவு 7.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு ஒரு விசேட ரயில் இயக்கப்படும், அதே நேரத்தில், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் ரயில் ஒன்று பயணிக்கவுள்ளது.

மேலும், இன்று இரவு 7.20 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து காலிக்கு ஒரு விசேட ரயில் இயக்கப்படும், அதே நேரத்தில் காலியில் இருந்து கொழும்பு கோட்டைக்கு ரயில் ஒன்று இயக்கப்படவுள்ளது.

மேலும், இன்று காலை கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு விசேட ரயில் ஒன்று பயணித்ததுடன், அந்த ரயில் மீண்டும் எதிர்வரும் 18 ஆம் திகதி திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த 10 விசேட ரயில்கள் ஊடாக புத்தாண்டு பருவம் மற்றும் நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களில் 31 பயணங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர மேலும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான பேருந்துகளை இன்றைய தினமும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயல்பாடுகள் மற்றும் சேவை மேற்பார்வை பணிப்பாளர் ஷெரீன் அதுக்கோரல தெரிவித்துள்ளார்.

மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி. சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...