Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லியின் எல்லைப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

T

The Leader Desk

செப்டம்பர் 27, 2021 • 5:19 AM

விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லியின் எல்லைப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, கடும் குளிர், மழை, கொரோனா அச்சுறுத்தல் ஆகியவற்றை எல்லாம் தாங்கி பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
  • விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது.
  • இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் முழு அடைப்புக்கு (பாரத் பந்த்) விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
எழுத்து அளவு:

கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, கடும் குளிர், மழை, கொரோனா அச்சுறுத்தல் ஆகியவற்றை எல்லாம் தாங்கி பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை. வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது. ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறினார்கள்.

இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் முழு அடைப்புக்கு (பாரத் பந்த்) விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் நாடு முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

'சம்யுக்தா கிசான் மோர்ச்சா' விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்தநிலையில்  நாடு தழுவிய வேலை நிறுத்தம் காலை 6 மணி முதல்  தொடங்கியது .   நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரி, கேரளா,  டெல்லி, அரியானா, பஞ்சாப், ஜார்க்கண்ட், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் அரசுகள் விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.  நாடு முழுவதும் ஆங்காங்கே விவசாயிகள் மறியல் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் சாலை மற்றும் ரெயில் போக்குவரத்தை முடக்கி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

டெல்லி- மீரட் சாலையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் வாகன போக்குவரத்தானது ஸ்தம்பித்துள்ளது. அனைத்து வழிகளையும் மறித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

டெல்லியில் ஜந்தர் மந்தரில்  காலை 11 மணிக்கு மாபெரும் பேரணியையும் விவசாயிகள் நடத்துகிறார்கள். 

விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லியின் எல்லைப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  குருகிராம், நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் ஏராளமான கார்கள் ஊர்ந்து செல்கின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லியின் எல்லைப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்! | Tamil Leader | We Lead the Nation