Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 108 வீடுகள்

T

The Leader Desk

செப்டம்பர் 24, 2023 • 1:22 PM

படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 108 வீடுகள்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உதவியுடன் கட்டப்படும் 1996 வீட்டு அலகுகள் குறித்த ஒப்பந்தம் அடுத்த மாதம் கைச்சாத்திடப்படும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீட்மைப்பு அமைச்சு தெரிவித்தது.
  • வீட்டு அலகுகளில் இந் நாட்டின் படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 108 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
  • இதன்படி குறைந்த வருமானம் பெறுவோருக்கு 1888 வீடுகள் ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.
  • இந்த வீடமைப்புத் திட்டத்திற்காக சீன அரசாங்கம் இந்த நாட்டுக்கு 552 மில்லியன் யுவான் நிதியுதவியை வழங்கவுள்ளது.
எழுத்து அளவு:

உதவியுடன் கட்டப்படும் 1996 வீட்டு அலகுகள் குறித்த ஒப்பந்தம் அடுத்த மாதம் கைச்சாத்திடப்படும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீட்மைப்பு அமைச்சு தெரிவித்தது.

அடுத்த மாதம் சீனாவின் பீஜிங்கில் நடைபெறும் "Belt and Road Initiative" (BRI) உச்சிமாநாட்டின் போது ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று அமைச்சும் கூறியது.

1996 வீட்டு அலகுகளில் இந் நாட்டின் படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 108 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பழதுறு வத்த பகுதியில் வீட்டுத் தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி குறைந்த வருமானம் பெறுவோருக்கு 1888 வீடுகள் ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த வீடமைப்புத் திட்டத்திற்காக சீன அரசாங்கம் இந்த நாட்டுக்கு 552 மில்லியன் யுவான் நிதியுதவியை வழங்கவுள்ளது.

இங்கு இத்திட்டத்திற்காக செலவிடப்படும் வரிப்பணம், காணி சுவீகரிப்புக்கான செலவு, காணி அபிவிருத்திக்கான செலவு, வடிவமைப்பு வேலைக்கான செலவு மற்றும் அடிப்படை விலைப்பட்டியல் தயாரிப்பதற்கான செலவு, டெண்டர் பணிக்கான செலவு மற்றும் கழிவுநீர் வசதிகளின் செலவு என்பன இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும்.

இது தொடர்பான பரிமாற்றக் கடிதத்தில் சீன மக்கள் குடியரசும் இலங்கை அரசும் கடந்த ஜனவரி 9 ஆம் திகதி கைச்சாத்திட்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் குறைந்த வசதிகள் கொண்ட குடியிருப்புகளில் வசிப்பவர்களின் குடியேற்றப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...