Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள பிள்ளையான் மீதான விசாரணை!

T

The Leader Desk

ஜூலை 10, 2025 • 3:05 AM

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள பிள்ளையான் மீதான விசாரணை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) நெருங்கிய சகா ஒருவரையும் சிஐடி கைது செய்திருந்தது.
  • பொறுப்புக்கூறல் என்பது நல்லிணக்கம் உருவாக முக்கிய காரணியாகவுள்ளது. 1998 - 1999 காலப்பகுதியில் சோமரத்ன ராஜபக்ச என்னும் நபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 15 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • நியாஸ் எனும் ஒருவர் சாய்ந்தமருதில் சுட்டுக்கொல்லப்பட்டவர்.
  • சாரா எனப்படும் புலஸ்தினியினுடைய 3வது DNA அறிக்கையின் பிற்பாடே அவர் இறந்து விட்டார் என மொழியப்பட்டது.
எழுத்து அளவு:

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) நெருங்கிய சகா ஒருவரையும் சிஐடி கைது செய்திருந்தது.

இந்த கைதின் பின்னர், பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டதுடன் வெவ்வேறு சம்பவங்கள் தொடர்பான அதிர்ச்சி தகவல்களும் வெளியாகின.

இந்நிலையில், தற்போது உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணைகளின் நகர்வுகள் தீவிரமடைந்துள்ளன.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னரே அறிந்திருந்தமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிள்ளையானுடன் இருந்து,  பல குற்றங்களுக்கு சாட்சியாகவுள்ள அசாத் மௌலானா வாக்குமூலம் வழங்குவதற்கு தயாராக இருக்கின்ற போதிலும் ஏன் இந்த அரசாங்கம் இன்னும் அதனைக் கேட்டுப் பெறவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதி மறுக்கப்படுவது என்பது நல்லிணக்கத்திற்கு பாதமான ஒரு விடயம். பொறுப்புக்கூறல் என்பது நல்லிணக்கம் உருவாக முக்கிய காரணியாகவுள்ளது. 

1998 - 1999 காலப்பகுதியில் சோமரத்ன ராஜபக்ச என்னும் நபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 15 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த மனித எச்சங்கள் ஸ்கொட்லாந்தில் உள்ளதாக அறிகின்றோம். ஏன் இவற்றை இலங்கை அரசாங்கம் ஆய்வு செய்யவில்லை. DNA பரிசோதனையை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்திற்கு வசதிகள் இல்லாத நிலையில் ஏன் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியை நாடுவதற்கு தயங்குகின்றது.

அரசாங்கம் செய்த குற்றங்களை அரசாங்கம் விசாரிப்பதில் சிக்கல் நிலை உள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றார். இதனாலேயே நாங்கள் சர்வதேச விசாரணை ஒன்றினை எதிர்பார்க்கின்றோம்.

அரசாங்கம் ஊழல் ஒழிப்பிற்கு ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதற்கு யோசிப்பது போல் ஏன் மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைக்க யோசிக்கவில்லை. அரசாங்கம் ஊழல் ஒழிப்பிற்கு விசேட அலுவலகம் ஒன்றினை உருவாக்க யோசிப்பது போல் ஏன் மனித உரிமை மீறல்களை விசாரிக்க அலுவலகம் அமைக்கவில்லை?

ஆரையம்பதியில் கொல்லப்பட்ட விஜிதா, மட்டக்களப்பில் கொல்லப்பட்ட ரிபாயா, பிறேமினி, மனித புதைகுழி உள்ள கொக்குத்தொடுவாய், மாத்தளை, செம்மணி, இன்னும் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை ஆகியவற்றின் மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை?

சட்டத்தில் இணையவழி (Online) மூலமாக வாக்குமூலம் பதிவு செய்வதற்கு இயலுமாக இருப்பினும் தற்போது பிள்ளையானுக்கு எதிராக சாட்சி அளிக்க தயாராக உள்ள அசாத் மௌலானாவின் வாக்குமூலமானது பதிவு செய்யப்படவில்லை.

அசாத் மௌலானா தனது வாக்குமூலத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய போதிலும் அவ்வறிக்கையினை இலங்கை அரசாங்கம் இன்றளவிலும் கேட்டுப் பெறவில்லை.

2004ஆம் ஆண்டிலிருந்து இந் நாட்டில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தினை உருவாக்கியது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே. கலில் (ஓட்டமாவடி) மற்றும் பாயிஸ் (காத்தான்குடி) எனும் அழைக்கப்படும் இருவர் தற்போது வரை இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.

கலில் என்பவர் தமிழரசுக் கட்ச்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவின் கொலை வழக்கில் பிள்ளையானுடன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட ஒருவர். இலங்கை அரசாங்கம் இன்று வரை இவர்களிடம் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை.

நியாஸ் எனும் ஒருவர் சாய்ந்தமருதில் சுட்டுக்கொல்லப்பட்டவர். இவர் நிந்தவூர் “Safe House” இல் இருந்ததாக இராணுவ புலனாய்வுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்ற போதும் அவரை பிடிக்க முடியவில்லை. ஆனால் இவர் ஒரு முக்கிய சாட்சியாக கருதப்படக்கூடிய ஒருவர். ஆனால் இச் சாட்சியை மூடி மறைத்துள்ளனர்.

சாரா எனப்படும் புலஸ்தினியினுடைய 3வது DNA அறிக்கையின் பிற்பாடே அவர் இறந்து விட்டார் என மொழியப்பட்டது. இரு தடவைகளும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பிரகாரம் அவரை ஏன் இனங்காண முடியவில்லை?

இவருடைய தேசிய அடையாள அட்டை அம்பாறை நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சாராவினுடைய அனைத்தும் தீக்கிரையாகி விட்டன என்றால் எவ்வாறு தேசிய அடையாள அட்டை மாத்திரம் கைப்பற்றப்பட்டது? இஸ்லாமிய அடிப்படை வாதத்தை வைத்துக்கொண்டு அரசியல் இலாபம் தேட நினைக்கும் கட்சிகள் உள்ளன.

மினுவாங்கொட போன்ற இடங்களில் இஸ்லாமியர்களின் கடைகளை எரித்ததற்கு பின்புலத்தில் சரத் வீரசேகர என்பவரே உள்ளார்” என்ற மைத்திரிபால சிறிசேனவின் குரல் பதிவும் உள்ளது. ஆனால் ஏன் இதுவரை காலமும் சரத் வீரசேகரவிடம் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை.

ரொஹான் குணரட்ன என அழைக்கப்படும் விரிவுரையாளர் சிங்கப்பூரில் உள்ள தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தில் Security Defence பற்றிய விரிவுரையாளர். ஐஎஸ் தீவிரவாத அமைப்பே இக் குற்றங்களுக்கு காரணம் என இவர் இரு மாதங்களுக்கு முன்பே கூறியுள்ளார்.

அரசாங்க அமைச்சர் பிள்ளையானே இக்குற்றங்களுக்கு பின்னணி சூத்திரதாரி எனக் கூறுகின்றார். ரொஹான் குணரட்ன என்பவர் பொய்யான வாக்குறுதிகளை வழங்கியமைக்காக கனடாவில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

ஆகவே இது தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், 2008ம் ஆண்டு காலப்பகுதியில் ஏறாவூர் பகுதியை சேர்ந்த முஹமட் ரசாக் என்பவரது துப்பாக்கி தொலைந்தது. இத் துப்பாக்கி நுவரெலியாவில் உள்ள ரசாக் என்பவரிடம் இருப்பதாக அவர் கைது செய்யப்பட்டார்.

இவர் “Islamic Centre” எனும் அமைப்பில் உள்ளார். இத் துப்பாக்கி சபீக் எனப்படுபவரிடமிருந்து ரசாக் என்பவருக்கு விற்கப்பட்டதாகவே தகவல்.

இத்துப்பாக்கியினையே ரில்வான் சாய்ந்தமருதில் ஏற்பட்ட குண்டு வெடிப்பின் போது வைத்திருந்தவர் என தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஏன் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சாணக்கியன் கேள்வி எழுப்பினார். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள பிள்ளையான் மீதான விசாரணை! | Tamil Leader | We Lead the Nation