Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

முந்தைய அரசாங்கங்களின் போதும் சட்டவிரோதமான முறையில் வீட்டுக்கு அனுப்பப்பட்ட குற்றவாளிகள்!

T

The Leader Desk

ஜூன் 10, 2025 • 10:00 AM

முந்தைய அரசாங்கங்களின் போதும் சட்டவிரோதமான முறையில் வீட்டுக்கு அனுப்பப்பட்ட குற்றவாளிகள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விடுதலைக்கு அனுமதிக்கப்படாத கைதிகள் குழுவொன்று, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
  • இந்த ஆண்டு வெசாக் பண்டிகைக்காக விடுவிக்கப்பட்ட 388 கைதிகளில், அங்கீகரிக்கப்படாத கைதிகள் குழுவின் பெயர்கள் இரகசியமாக சேர்க்கப்பட்டிருப்பது தொடர்பான தகவல்கள் வெளியானதை அடுத்து, இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
  • அபராதம் செலுத்துவதில் சிரமங்கள் காரணமாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகள், தண்டனைக் காலம் முடியும் தருவாயில் உள்ள கைதிகளே, இவ்வாறு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படுவார்கள் என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்றும், நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து ஜனாதிபதி மன்னிப்புக்கு தகுதியற்ற 26 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக, குற்றப் புலனாய்வுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:

விடுதலைக்கு அனுமதிக்கப்படாத கைதிகள் குழுவொன்று, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் ஏற்கனவே விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த அரசாங்கங்களின் போது ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட கைதிகளின் பட்டியலை பெற்று விசேட பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு வெசாக் பண்டிகைக்காக விடுவிக்கப்பட்ட 388 கைதிகளில், அங்கீகரிக்கப்படாத கைதிகள் குழுவின் பெயர்கள் இரகசியமாக சேர்க்கப்பட்டிருப்பது தொடர்பான தகவல்கள் வெளியானதை அடுத்து, இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், வெசாக் பண்டிகை மற்றும் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக, ஒவ்வொரு ஜனாதிபதியும் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் கைதிகளை விடுவிக்கின்றனர்.

அபராதம் செலுத்துவதில் சிரமங்கள் காரணமாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகள், தண்டனைக் காலம் முடியும் தருவாயில் உள்ள கைதிகளே, இவ்வாறு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படுவார்கள் என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட கைதிகளின் பட்டியலில் கடுமையான குற்றவாளிகளின் பெயர்கள் திட்டமிட்டு உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சில காலமாக இரகசியமாக விடுவிக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்றும், நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து ஜனாதிபதி மன்னிப்புக்கு தகுதியற்ற 26 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக, குற்றப் புலனாய்வுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலை அதிகாரிகள் சிலரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் செயல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட சந்தேகநபரான அநுராதபுரத்தைச் சேர்ந்த திலகரத்னவை கைது செய்ய பல புலனாய்வுக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

முந்தைய அரசாங்கங்களின் போதும் சட்டவிரோதமான முறையில் வீட்டுக்கு அனுப்பப்பட்ட குற்றவாளிகள்! | Tamil Leader | We Lead the Nation