Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

குட்டித் தேர்தலின் அதிகாரத்தைக் கைப்பற்ற மும்முரம்: ஏலத்தில் சிக்கியுள்ள வேட்பாளர்கள்!

T

The Leader Desk

மே 10, 2025 • 5:12 AM

குட்டித் தேர்தலின் அதிகாரத்தைக் கைப்பற்ற மும்முரம்: ஏலத்தில் சிக்கியுள்ள வேட்பாளர்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களது ஆதரவுகளைத் திரட்டும் பணிகள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
  • இலங்கையில் மிகவும் பெரிய மாநகர சபையாக கொழும்பு மாநகர சபை கருதப்படுகின்றமையினால் அதனை கைப்பற்றுவதே அரசியல் கட்சிகளின் பிரதான இலக்காக மாறியுள்ளது.
  • நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய, கொழும்பு மாநகர சபையில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களையும் எதிர்க்கட்சிகள் 69 ஆசனங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களது ஆதரவுகளைத் திரட்டும் பணிகள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆதரவை வழங்குவதாயில், அதற்கு பதிலீடாக பல்வேறு வரப்பிரசாதங்களையும் உதவிகளையும் வழங்குவதற்காக, அரசியல் கட்சிகளுக்கு ஆதரவான வர்த்தகர்கள் பலரும் முன்வந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

சமகாலத்தில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்கள் இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மாநகர சபையில் யார் ஆட்சியை நிறுவுவது என்பதே பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களில் பிரதேச சபைகள் மற்றும் மாநகர சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது பற்றிப் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ள நிலையில், ​​கொழும்பு மாநகர சபை மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் மிகவும் பெரிய மாநகர சபையாக கொழும்பு மாநகர சபை கருதப்படுகின்றமையினால் அதனை கைப்பற்றுவதே அரசியல் கட்சிகளின் பிரதான இலக்காக மாறியுள்ளது.

கொழும்பில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இரு பெரிய கட்சிகளின் தலைவர்களும் தற்போது சுயேச்சை குழுக்கள் மற்றும் சிறிய கட்சிகளுடன் தீவிர கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் கொழும்பில் உள்ள சொகுசு ஹோட்டல்களில் இரு தரப்பினரும் இந்த விவகாரம் குறித்து விவாதித்து வருவதாக அரசியல்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இதுவரை தீர்க்கமான முடிவினை எட்ட முடியாத நிலையில், அரசியல் கட்சிகள் திணறி வருகின்றன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்திற்குப் பிறகு இந்த விடயம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய, கொழும்பு மாநகர சபையில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களையும் எதிர்க்கட்சிகள் 69 ஆசனங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...