Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

தேசபந்துவை தேடி கதிர்காமம் பஸ்நாயக்க நிலமேயின் வீட்டில் அதிரடி சோதனை!

T

The Leader Desk

மார்ச் 10, 2025 • 5:31 AM

தேசபந்துவை தேடி கதிர்காமம் பஸ்நாயக்க நிலமேயின் வீட்டில் அதிரடி சோதனை!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரதேசத்தில் உள்ள வீடு, நேற்று (09) இரவு 11.00 மணியளவில் பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
  • இந்த நேரத்தில், பஸ்நாயக்க நிலமேவின் 84 வயது தாயார் மட்டுமே அந்த வீட்டில் இருந்துள்ளார்.
  • கதிர்காமம் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே இன்று (10) காலை கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறை தலைமையகத்திற்கு வாக்குமூலம் அளிக்க வரவிருந்த நிலையிலேயே, இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

பிரதேசத்தில் உள்ள வீடு, நேற்று (09) இரவு 11.00 மணியளவில் பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டைச் சோதனை செய்வதற்கான எந்தவொரு சட்ட aஅனுமதியுமின்றி, பொலிஸ் பரிசோதகர் எம்.ஆர். தயானந்தா தலைமையிலான குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளின் இரண்டு குழுக்கள் கொழும்பிலிருந்து மாத்தறைக்குச் சென்று, இரவிரவாக அந்த வீட்டைச் சோதனை செய்ததாக, லங்கா நியூஸ் வெப் செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்படி பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அனைவரும், சிவில் உடையிலேயே அங்கு சென்றதாகவும், தங்கள் அடையாள அட்டைகளை காண்பிக்குமாறு கேட்டபோதும், அவர்கள் அதைச் செய்ய மறுத்துவிட்டு, வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நேரத்தில், பஸ்நாயக்க நிலமேவின் 84 வயது தாயார் மட்டுமே அந்த வீட்டில் இருந்துள்ளார்.

இது குறித்து நாம் விசாரித்தபோது கருத்துத் தெரிவித்த ​​கதிர்காமம் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர, இந்த சோதனை குறித்து மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கோ அல்லது அந்தப் பகுதிக்குப் பொறுப்பான மாலிம்பட பொலிஸ் நிலையத்துக்கோ அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று கூறினார்.

நீதிமன்றத்தால் இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோன், தனது வீட்டில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் உயரதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பின்னர் தெரியவந்ததாக அவர் மேலும் கூறினார்.

கதிர்காமம் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே இன்று (10) காலை கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறை தலைமையகத்திற்கு வாக்குமூலம் அளிக்க வரவிருந்த நிலையிலேயே, இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி:

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...