Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

11 நாட்களாக சிக்காமல் தலைமறைவாகியிருக்கும் தேசபந்து!

T

The Leader Desk

மார்ச் 10, 2025 • 5:08 AM

11 நாட்களாக சிக்காமல் தலைமறைவாகியிருக்கும் தேசபந்து!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிறப்பித்து 11 நாட்கள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை அவர் தொடர்பான எந்த தகவலும் இல்லை.
  • முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
  • இதையடுத்து அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

பிறப்பித்து 11 நாட்கள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை அவர் தொடர்பான எந்த தகவலும் இல்லை.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அது தொடர்புடைய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தேசபந்து தென்னகோனை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த 28ஆம் திகதி பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு பெரிய அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருப்பதாக  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பகிரங்கப்படுத்தியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் பொலிஸ் தரப்புக்கு பயந்து ஒரு பொலிஸ் மா அதிபர் மறைந்திருப்பது இதுவே முதல் முறை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ஷானி அபேசேகர ஒரு திறமையான நபர் என்றும், மறைந்திருக்கும் தேசபந்து தென்னகோனை அவர் கைது செய்வார் என்றும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

11 நாட்களாக சிக்காமல் தலைமறைவாகியிருக்கும் தேசபந்து! | Tamil Leader | We Lead the Nation