Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

340,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு!

T

The Leader Desk

பிப்ரவரி 10, 2025 • 1:59 PM

340,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அனுப்ப எதிர்பார்ப்பதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
  • சேனாநாயக்க, 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் 7 ​​பில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.
  • ஆம் ஆண்டில், சுமார் 314,000 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றனர்.
  • அதன்படி, 2024ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர் பணம் அனுப்புதலில் 6.51 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டதாக டி.டி.பி.
எழுத்து அளவு:

அனுப்ப எதிர்பார்ப்பதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு தௌிவூட்டுவதற்காக தொடர் நிகழ்ச்சித் திட்டங்களின் முதலாவது நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய அதன் தலைவர் கோசல விக்ரமசிங்க இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பணியகத்தின் பொது முகாமையாளர் டி.டி.பி. சேனாநாயக்க, 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் 7 ​​பில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

2024ஆம் ஆண்டில், சுமார் 314,000 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றனர்.

அதன்படி, 2024ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர் பணம் அனுப்புதலில் 6.51 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டதாக டி.டி.பி. சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற தொழிலாளர்களில் 65% பேர் தொழில்முறை வேலைகளுக்கும், 35% பேர் குறைந்தபட்ச தொழில்முறை வேலைகளுக்கும் சென்றதாக பொது முகாமையாளர் மேலும் கூறியுள்ளார்.

2025ஆம் ஆண்டளவில், 75 சதவீத தொழிலாளர்களை தொழில்முறை வேலைகளுக்கும், 25 சதவீத தொழிலாளர்களை குறைந்தபட்ச தொழில்முறை வேலைகளுக்கும் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, குவைத்துக்கு 84,000 பேரும், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு 55,000 பேரும், சவுதி அரேபியாவுக்கு 52,000 பேரும் அனுப்ப எதிர்பார்க்கப்படுகிறது.

பணியகம் ஊடாக நேரடியாக அனுப்பப்படும் இஸ்ரேலிய வேலைவாய்ப்புகளுக்காக 15,900 பேரையும், ஜப்பான் வேலைவாய்ப்புக்காக 9,000 பேரையும் தென் கொரியாவிற்கு 8000 பேரையும் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...