Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

மரணத்திற்கு சில தினங்களுக்கு முன்பு..! நண்பனை திருமணம் செய்து கொண்ட 10 வயது சிறுமி

T

The Leader Desk

ஆகஸ்ட் 9, 2023 • 12:30 AM

மரணத்திற்கு சில தினங்களுக்கு முன்பு..! நண்பனை திருமணம் செய்து கொண்ட 10 வயது சிறுமி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி அமெரிக்காவில் எம்மா எட்வர்ட் என்ற 10 வயது சிறுமி லுகேமியாவால் இறப்பதற்கு 12 தினங்களுக்கு முன்பு டேனியல் மார்ஷல் கிறிஸ்டோபர் “டிஜே” என்ற தன்னுடைய அன்பான நண்பனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
  • Kennedy News/Erick Messer எம்மா-வை மணந்த அன்பு நண்பர் 100 விருந்தினர்கள் வரை அழைக்கப்பட்டு தோட்டத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் சிறுமி எம்மா-வை அவளது நெருங்கிய நண்பன் டேனியல் மார்ஷல் கிறிஸ்டோபர் “டிஜே” திருமணம் செய்து கொண்டார்.
  • எந்த முயற்சியும் இனி கைகூடாது, எம்மா இன்னும் சில வாரங்களுக்கு பிறகு நம்மை விட்டு பிரிந்து விடுவாள் என்பதை உணர்ந்த எம்மாவின் தாய் அலீனா, “டிஜே”வின் தாயுடன் பேசி விரைவாக மாதிரி திருமணம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
எழுத்து அளவு:

கொண்டுள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி

அமெரிக்காவில் எம்மா எட்வர்ட் என்ற 10 வயது சிறுமி லுகேமியாவால் இறப்பதற்கு 12 தினங்களுக்கு முன்பு டேனியல் மார்ஷல் கிறிஸ்டோபர் “டிஜே” என்ற தன்னுடைய அன்பான நண்பனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

எம்மாவிற்கு கடந்த ஆண்டு ஏப்ரலில் கடுமையான லிம்போபிளாஸ்டிக் லுகேமியா(acute lymphoblastic leukaemia) என்ற நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது, இருப்பினும் எம்மாவின் பெற்றோர்களான அலீனா மற்றும் ஆரோன் எட்வர்ட் நோய் பாதிப்பை குணப்படுத்தி விடலாம் என்று எண்ணினர். 

us-girl-10-marries-boyfriend-day-before-dying-cancer:மரணத்திற்கு சில தினங்களுக்கு முன்பு..! நண்பனை திருமணம் செய்து கொண்ட 10 வயது சிறுமிKennedy News/Erick Messer

ஆனால் எம்மாவின் புற்றுநோய் குணப்படுத்த முடியாது என்ற அதிர்ச்சிகரமான தகவல் ஜூன் மாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இருந்தும் மனம் தளராமல் மாற்று சிகிச்சைகளை மேற்கொண்டு எம்மாவை காப்பாற்றி விடலாம் என்று பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர்.

எந்த முயற்சியும் இனி கைகூடாது, எம்மா இன்னும் சில வாரங்களுக்கு பிறகு நம்மை விட்டு பிரிந்து விடுவாள் என்பதை உணர்ந்த எம்மாவின் தாய் அலீனா, “டிஜே”வின் தாயுடன் பேசி விரைவாக மாதிரி திருமணம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.

மரணத்திற்கு சில தினங்களுக்கு முன்பு..! நண்பனை திருமணம் செய்து கொண்ட 10 வயது சிறுமிKennedy News/Erick Messer

எம்மா-வை மணந்த அன்பு நண்பர்

 100 விருந்தினர்கள் வரை அழைக்கப்பட்டு தோட்டத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் சிறுமி எம்மா-வை அவளது நெருங்கிய நண்பன் டேனியல் மார்ஷல் கிறிஸ்டோபர் “டிஜே” திருமணம் செய்து கொண்டார்.

இதில் அவர்களது நண்பர் ஒருவர் பைபிள் வாசித்தார், எம்மாவின் நண்பர் ஒருவர் மரியாதை வழங்கினார்.

மரணத்திற்கு சில தினங்களுக்கு முன்பு..! நண்பனை திருமணம் செய்து கொண்ட 10 வயது சிறுமிKennedy News/Erick Messer

இதனிடையே எம்மாவின் தாய் அலினா தன்னுடைய மருமகன் “டிஜே” நீங்கள் பார்த்ததில் மிகவும் அன்பான ஆத்மா கொண்டவர், அத்துடன் அவர் எம்மாவை மிகவும் நேசித்தார் என்று குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...