Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

மூடுதலை நீடிக்காவிட்டால் 10,000 உயிர்களை இழக்கவேண்டிவரும்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 28, 2021 • 11:23 AM

மூடுதலை நீடிக்காவிட்டால் 10,000 உயிர்களை இழக்கவேண்டிவரும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உயிர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்கவும், தற்போதைய கட்டுப்பாடுகள் செப்டம்பர் 18 வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்றும், மக்கள் இணங்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.
  • அக்குழுவின் சமீபத்திய அறிக்கையின்படி, 90 சதவிகிதத்திற்கும் அதிகமான மாதிரிகள், புதிய கொரோனா வைரஸின் டெல்டா திரிபு மேல் மாகாணம் மற்றும் பிற மாகாணங்களுக்கும் பரவியிருப்பதை காட்டுகிறது.
  • வைரஸ் பரவுதல், மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையை கண்டிப்பாக கட்டுப்படுத்துவதன் மூலம் பொருளாதார மீட்சியை துரிதப்படுத்த முடியும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
  • தற்போதைய காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டால் இறப்புகளின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்றும், மூடுதல் செப்டம்பர் 18 வரை நீடிக்கப்பட்டால் 7,500 இறப்புகளைத் தடுக்கலாம் என்றும் குழு கூறியது.
எழுத்து அளவு:

உயிர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்கவும், தற்போதைய கட்டுப்பாடுகள் செப்டம்பர் 18 வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்றும், மக்கள் இணங்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.

அக்குழுவின் சமீபத்திய அறிக்கையின்படி, 90 சதவிகிதத்திற்கும் அதிகமான மாதிரிகள், புதிய கொரோனா வைரஸின் டெல்டா திரிபு மேல் மாகாணம் மற்றும் பிற மாகாணங்களுக்கும் பரவியிருப்பதை காட்டுகிறது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) இலங்கை அலுவலகத்தின் தலைமையில் சுதந்திர தொழில்நுட்ப நிபுணர் குழு நேற்று கூடி முக்கிய அவதானிப்புகள், தொழில்நுட்ப மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய அதன் புதிய அறிக்கையை வெளியிட்டது.

அந்த அறிக்கையின்படி, புதிய கொரோனா வைரஸின் டெல்டா திரிபு வேகமாக பரவி, இயலாத கட்டத்தில் மருத்துவமனைக்கு செல்கின்றனர், மேலும் வைரஸால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. ஒக்ஸிஜன் உள்ளிட்ட மருந்து பொருட்களும் குறைவாக இருப்பதாக நிபுணர் குழு தெரிவிக்கிறது.

வீடுகளிலும் இந்த வைரஸ் பரவி வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையை கவனத்தில் எடுத்துக்கொண்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் அதற்கு இணங்க வேண்டும் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதற்கிடையில், தடுப்பூசி செயல்முறை துரிதப்படுத்தப்பட வேண்டும்.

வைரஸ் பரவுதல், மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையை கண்டிப்பாக கட்டுப்படுத்துவதன் மூலம் பொருளாதார மீட்சியை துரிதப்படுத்த முடியும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

தற்போதைய காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டால் இறப்புகளின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்றும், மூடுதல் செப்டம்பர் 18 வரை நீடிக்கப்பட்டால் 7,500 இறப்புகளைத் தடுக்கலாம் என்றும் குழு கூறியது. அக்டோபர் 2 வரை காலக்கெடுவை நீட்டித்தால் 10,000 இறப்புகளைத் தடுக்கலாம் என்றும் குழு கூறியது.

இது இலங்கையில் அதிக இறப்பு விகிதங்களில் ஒன்றாகும்.

இந்த கலந்துரையாடல்களை உலக சுகாதார அமைப்பின் தலைவரும் உலக சுகாதார அமைப்பின் ஆலோசகருமான வைத்தியர் டெட்ரோஸ் அதனோமின் சிறப்பு பிரதிநிதி வைத்தியர் பாலித அபேகோன் எளிதாக விளக்குகிறார்.

நிபுணர் குழுவிற்கு உலக சுகாதார அமைப்பின் இலங்கையின் பிரதிநிதியாக வைத்தியர் அழகா சிங் தலைமை தாங்குகிறார்.

வைத்தியர் விந்யா ஆரியரத்ன, பேராசிரியர் அசிதா டி சில்வா,வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன, பேராசிரியர் சரோஜ் குணரத்ன, பேராசிரியர் இந்திக கருணாதிலகே, வைத்தியர் ரஜீவ டி சில்வா, பேராசிரியை நீலிகா மளவிகே, பேராசிரியர் கமினி மெண்டிஸ், பேராசிரியர் மலிக் பீரிஸ், பேராசிரியர். மனுஜ் வீரசிங்க,வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம 14 பலர் இந்த நிபுணர் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

மேலதிகமாக, WHO மருத்துவர்கள் குழுவும் பங்கேற்கிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...