Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

'ஜெய் பீம்' திரைப்படம் : பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ரூ.1 கோடி நிதி!

T

The Leader Desk

நவம்பர் 1, 2021 • 12:34 PM

'ஜெய் பீம்' திரைப்படம் : பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ரூ.1 கோடி நிதி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் 'ஜெய் பீம்' திரைப்படம் நாளை அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.
  • அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம்.
  • நடிகர் சூர்யா மற்றும் ஜெய்பீம் படக்குழுவுக்கு முதல்-அமைச்சர் மு.க.
எழுத்து அளவு:

நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் 'ஜெய் பீம்' திரைப்படம் நாளை  அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது. நடிகர் சூர்யா மற்றும் ஜெய்பீம் படக்குழுவுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து இருந்தார். முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நேற்று நண்பர் சூர்யா, வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள #ஜெய்பீம் திரைப்படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம். பார்வையளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன்விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு. 

படம் எடுத்ததோடு நில்லாமல், பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ரூ.1 கோடி நிதியினை வழங்கிய நண்பர் சூர்யா அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும். படக்குழுவினருக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்! ஜெய்பீம் போன்ற படங்கள் இன்னும் ஏராளமாக வரவேண்டும்!  என்று தெரிவிக்கப்பட்ட்டு இருந்தது.

இந்த நிலையில், முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து டுவிட் செய்துள்ளார். இது குறித்து சூர்யா வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது;- “ வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன்.  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின்  உணர்வுப்பூர்வமான  பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது.  ஜெய்பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்”

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...