Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பணி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கைது!

T

The Leader Desk

ஜூன் 9, 2025 • 3:47 PM

பணி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • கைது செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நாளைய தினம் (10) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
  • ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • இதேவேளை, அநுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன, இன்று (09) காலை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, ஜூன் 11 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர், ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று மூன்றாவது நாளாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நாளைய தினம் (10) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

முந்திய செய்திகள்,

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்!

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை கட்டாய விடுமுறையில் அனுப்ப அமைச்சரவை இன்று (09) தீர்மானித்தது.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அநுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன, இன்று (09) காலை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, ஜூன் 11 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று அநுராதபுர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஊழல் மற்றும் மோசடி குற்றங்களில் தொடர்புடைய கைதி ஒருவரை, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சட்டவிரோதமாக விடுதலை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மொஹான் கருணாரத்ன கைது செய்யப்பட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...