Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

25/ 20 வருட சிறைத் தண்டனைகளுக்கு எதிராக மேன்முறையீடு!

T

The Leader Desk

ஜூன் 9, 2025 • 3:10 PM

25/ 20 வருட சிறைத் தண்டனைகளுக்கு எதிராக மேன்முறையீடு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த மேல்முறையீட்டு மனு, உயர் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
  • இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு, நளின் பெர்ணான்டோவுக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதித்தது.
  • இதனைத் தொடர்ந்து, இந்தத் தீர்ப்பை இரத்து செய்ய உத்தரவிடுமாறும், தன்னை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்ய உத்தரவிடுமாறும் நளின் பெர்ணான்டோ உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
  • உயர் நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தை எதிர்த்து முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
எழுத்து அளவு:

வாங்கி, விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் அரசாங்கத்துக்கு 53 மில்லியன் ரூபாவுக்கும் மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, 25 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நளின் பெர்ணான்டோ, இந்தத் தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த மேல்முறையீட்டு மனு, உயர் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு, நளின் பெர்ணான்டோவுக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதித்தது.

இதனைத் தொடர்ந்து, இந்தத் தீர்ப்பை இரத்து செய்ய உத்தரவிடுமாறும், தன்னை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்ய உத்தரவிடுமாறும் நளின் பெர்ணான்டோ உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

உயர் நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தை எதிர்த்து முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​சதொச ஊடாக 14,000 கேரம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது. 

அதற்கமைய, குறித்த வழக்கு விசாரணையில் அவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...