Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஜனாதிபதியின் பொது மன்னிப்பை தறவாகப் பயன்படுத்திய அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நேர்ந்த கதி!

T

The Leader Desk

ஜூன் 9, 2025 • 3:07 AM

ஜனாதிபதியின் பொது மன்னிப்பை தறவாகப் பயன்படுத்திய அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நேர்ந்த கதி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • அதன்படி, நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட டபிள்யூ.எம்.
  • அத்துல திலகரத்ன என்ற குற்றவாளி, மே 12ஆம் திகதி வெசாக் பௌர்ணமி நாளில், ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எழுத்து அளவு:

அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.

40 இலட்சம் ரூபாவை மோசடி செய்தமைக்காக, அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவரை விடுதலை செய்ய உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட கைதி ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளதாக, சம்பந்தப்பட்ட அத்தியட்சகர் வட மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதன்படி, நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட டபிள்யூ.எம். அத்துல திலகரத்ன என்ற குற்றவாளி, மே 12ஆம் திகதி வெசாக் பௌர்ணமி நாளில், ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிறைச்சாலை அத்தியட்சகரின் வாக்குமூலத்தை கருத்திற்கொண்ட வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாவசம், குற்றவாளிகளை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர், இன்றைய தினம் அநுராதபுரம் பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...