Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மாணவி மரணம்: டியூஷன் உரிமையாளர் CIDயில் முறைப்பாடு!

T

The Leader Desk

மே 9, 2025 • 3:54 PM

மாணவி மரணம்: டியூஷன் உரிமையாளர் CIDயில் முறைப்பாடு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, தனியார்க் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர், இன்று (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
  • சம்பவத்தில் உயிரிழந்த மாணவி நோய்வாய்ப்பட்டிருந்ததால், அவருடைய பெற்றோரை அழைத்து, நோய் குணமானதும் தனியார் வகுப்புக்கு அனுப்புமாறு மாத்திரமே தான் அவர்களைக் கோரியதாகவும், கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் செய்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
  • கொட்டாஞ்சேனை - கல்போத்த வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தில்ஷி அம்ஷிகா என்ற 16 வயது மாணவி, கடந்த 29ஆம் திகதியன்று, 6ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
எழுத்து அளவு:

மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, தனியார்க் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர், இன்று (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க ஒரு குழுவினரால் வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த மாணவி நோய்வாய்ப்பட்டிருந்ததால், அவருடைய பெற்றோரை அழைத்து, நோய் குணமானதும் தனியார் வகுப்புக்கு அனுப்புமாறு மாத்திரமே தான் அவர்களைக் கோரியதாகவும், கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் செய்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் தன் மீது கடுமையான விமர்சனங்கள் சுமத்தப்படுவதால் தான் அசிங்கப்பட்டுள்ளதாகவும், யாரோ வேண்டுமென்றே இதைச் செய்கிறார்கள் என்று சந்தேகிப்பதாகவும் சம்பந்தப்பட்ட நபர் கூறியுள்ளார்.

கொட்டாஞ்சேனை - கல்போத்த வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தில்ஷி அம்ஷிகா என்ற 16 வயது மாணவி, கடந்த 29ஆம் திகதியன்று, 6ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு பாடசாலையில் படித்து வந்த அந்த மாணவி, அங்குள்ள ஒரு ஆசிரியரால் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு  ஆளாக்கப்பட்டார் என்று இது விவகாரத்தில், தனியார் பயிற்சி வகுப்பு உரிமையாளராலும் அம்மாணவ மன அழுத்தத்துக்கு ஆளானதாகக் கூறப்படுகின்ற நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...