Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

முன்பள்ளிக் குழந்தை சாப்பிட்டுக்கொண்டிருந்த Fish Bunஇல் கஞ்சா பொதிகள்!

T

The Leader Desk

மே 9, 2025 • 3:43 PM

முன்பள்ளிக் குழந்தை சாப்பிட்டுக்கொண்டிருந்த Fish Bunஇல் கஞ்சா பொதிகள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொண்டு வந்த மீன் பண்ணுக்குள் (Fish Bun) இரண்டு கஞ்சாப் பொதிகள் இருந்துள்ளன.
  • பேக்கரி பொருட்கள் விற்பனை செய்யும் முச்சக்கர வண்டிnயான்றிலிருந்தே, மேற்படி மீன் பணிஸை வாங்கியதாகவும், பின்னர் ஓட்டுநர் திரும்பி வந்து குழந்தைக்கு அந்த மீன் பணிஸைக் கொடுக்க வேண்டாம் என்று கூறியதாகவும் தெரியவருகிறது.
  • மேற்படி குழந்தை, அந்த மீன் பணிஸை சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, ​​இரண்டு சிறிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

கொண்டு வந்த மீன் பண்ணுக்குள் (Fish Bun) இரண்டு கஞ்சாப் பொதிகள் இருந்துள்ளன.

மேற்படி குழந்தை, அந்த மீன் பணிஸை சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, ​​இரண்டு சிறிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் வகுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்ட பின்னரே, இந்தக் கடத்தல் விவகாரம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

பின்னர் அந்த ஆசிரியர், சம்பந்தப்பட்ட குழந்தையின் தாயாரை தொலைபேசியில் அழைத்து, மேற்படி மீன் பணிஸ் தொடர்பில் அறிவித்ததை அடுத்து, அதை அந்தக் குழந்தைக்கு கொடுக்க வேண்டாம் என்று தாயார் அறிவித்துள்ளார். காரணம், அந்த பணிஸ், உவர்ப்பாக இருந்துள்ளது.

பேக்கரி பொருட்கள் விற்பனை செய்யும் முச்சக்கர வண்டிnயான்றிலிருந்தே, மேற்படி மீன் பணிஸை வாங்கியதாகவும், பின்னர் ஓட்டுநர் திரும்பி வந்து குழந்தைக்கு அந்த மீன் பணிஸைக் கொடுக்க வேண்டாம் என்று கூறியதாகவும் தெரியவருகிறது.

பின்னர் அவர்கள் இச்சம்பவம் குறித்து முன்பள்ளியின் அதிபருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நடமாடும் பேக்கரி தயாரிப்பு விற்பனை வாகனத்தின் ஓட்டுநர், பேக்கரி பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி, கஞ்சா கடத்தலில் நுட்பமாக ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

வேறு ஒருவருக்கு கொடுப்பதற்காக அவர் கொண்டுவந்த கஞ்சா கலந்த மீன் பணிஸ், மேற்படி குழந்தையின் தாயாருக்கு தவறுதலாக விற்றுவிட்டார் என்பது பின்னர் தெரியவந்துள்ளது.

அதன்படி, சம்பவம் தொடர்பாக அதிபர் இன்று கடவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...