Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஹெலி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு: காரணமும் வெளியானது!

T

The Leader Desk

மே 9, 2025 • 8:31 AM

ஹெலி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு: காரணமும் வெளியானது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 6 வீரர்கள் உயிரிழந்தனர்.
  • விபத்து இடம்பெற்ற போது, ஹெலிகொப்டரில் 12 இராணுவ வீரர்கள் பயணித்துள்ள நிலையில், ஏனைய 6 வீரர்கள் அரலகங்வில மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • விபத்துக்குள்ளான இந்த ஹெலிகொப்டர், இலங்கை விமானப்படையின் 7வது பிரிவுக்கு சொந்தமானது.
  • இந்த ஹெலிகொப்டர் இன்று காலை 6:44 மணியளவில் ஹிங்குரக்கொட விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டது.
எழுத்து அளவு:

காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 6 வீரர்கள் உயிரிழந்தனர்.

ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

விபத்து இடம்பெற்ற போது, ஹெலிகொப்டரில் 12 இராணுவ வீரர்கள் பயணித்துள்ள நிலையில், ஏனைய 6 வீரர்கள் அரலகங்வில மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்குள்ளான இந்த ஹெலிகொப்டர், இலங்கை விமானப்படையின் 7வது பிரிவுக்கு சொந்தமானது. இந்த ஹெலிகொப்டர் இன்று காலை 6:44 மணியளவில் ஹிங்குரக்கொட விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டது.

மாதுரு ஓயா இராணுவ பயிற்சிப் பாடசாலையில் நடைபெறவிருந்த விசேட படையின் விடைபெறுதல் அணிவகுப்பு நிகழ்ச்சிக்காக இராணுவ வீரர்களை ஏற்றிச் செல்வதற்காக இந்த ஹெலிகொப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

விமானப்படையின் தகவலின்படி, காலை 7:08 மணியளவில் மாதுரு ஓயா பகுதியில் ஹெலிகொப்டரில் 6 இராணுவ வீரர்கள் ஏற்றப்பட்டனர். இதனால், விமானிகள் இருவர் உட்பட 6 விமானப்படை வீரர்கள் என மொத்தம் 12 பேர் ஹெலிகொப்டரில் இருந்துள்ளனர்.

இதன்போது, ஹெலிகொப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசர தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, ஹெலிகொப்டர் மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்ததாக விமானப்படை தெரிவித்தது.

விமானப்படை மற்றும் இராணுவ வீரர்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். விபத்தில் சிக்கிய 12 பேரும் மீட்கப்பட்டு அரலகங்வில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 8 பேர் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

எனினும், 6 வீரர்கள் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவ விசேட படையைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த இரண்டு பேருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து விசாரிக்க 9 பேர் கொண்ட குழுவை நியமிக்க விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஹெலி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு: காரணமும் வெளியானது! | Tamil Leader | We Lead the Nation