Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

வடக்கில் 56 பாடசாலைகள் விரைவில் மூடப்படும் நிலை!

T

The Leader Desk

ஏப்ரல் 9, 2025 • 1:08 PM

வடக்கில் 56 பாடசாலைகள் விரைவில் மூடப்படும் நிலை!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விரைவில் மூடுவதற்குக் கல்வி அமைச்சு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
  • வடக்கு மாகாணத்தில் ஐம்பதுக்கும் குறைந்த மாணவர்கள் கல்வி கற்கும் 266 பாடசாலைகள் உள்ளன என்ற அதிர்ச்சித் தகவலை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
  • நாடு முழுவதும் ஐம்பதுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ள பாடசாலைகளை, 3 கிலோ மீற்றருக்குள் வேறு பாடசாலையிருப்பின் அவற்றை மூடுவதற்குத் தற்போதைய அரசு திட்டமிட்டுள்ளது.
  • வடக்கில் தற்போதுள்ள 13 கல்வி வலயங்களிலும் 981 பாடசாலைகள் இயங்குகின்றன.
எழுத்து அளவு:

விரைவில் மூடுவதற்குக் கல்வி அமைச்சு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் ஐம்பதுக்கும் குறைந்த மாணவர்கள் கல்வி கற்கும் 266 பாடசாலைகள் உள்ளன என்ற அதிர்ச்சித் தகவலை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் ஐம்பதுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ள பாடசாலைகளை, 3 கிலோ மீற்றருக்குள் வேறு பாடசாலையிருப்பின் அவற்றை மூடுவதற்குத் தற்போதைய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கில் தற்போதுள்ள 13 கல்வி வலயங்களிலும் 981 பாடசாலைகள் இயங்குகின்றன. இந்த 981 பாடசாலைகளில் 2 இலட்சத்து 29 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இங்கே 981 பாடசாலைகள் உள்ளபோதும் அவற்றில் 454 பாடசாலைகளில் ஒவ்வொன்றிலும் 100க்கும் குறைந்த மாணவர்களே கல்வி கற்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இதிலும் மிக மோசமான நிலைமையாக 266 பாடசாலைகளில் ஐம்பதுக்கும் குறைவான மாணவர்களே கல்வி கற்கின்றமையும் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

266 பாடசாலைகளில் ஐம்பதுக்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கின்ற போதும், 3 கிலோமீற்றர் தூரத்துக்குள் வேறு பாடசாலைகள் இல்லாத நிலை, கடல் கடந்த சூழல், விசேட தேவை என்பவற்றைக் கருத்தில்கொண்டு மூடப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மூடப்படும் நிலையில் வடக்கில் 56 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தில் ஐம்பதுக்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 95 பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 20 பாடசாலைகளும், மன்னார் மாவட்டத்தில் 41 பாடசாலைகளும், வவுனியா மாவட்டத்தில் 72 பாடசாலைகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 37 பாடசாலைகளும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் வடக்கில் மூடப்படும் நிலையில் காணப்படும் 56 பாடசாலைகளிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிக பாடசாலைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வடக்கில் 56 பாடசாலைகள் விரைவில் மூடப்படும் நிலை! | Tamil Leader | We Lead the Nation