Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

'ரணில் - ராஜபக்ஷ கூட்டணியில் கடத்தல் சூத்திரதாரி பிள்ளையான்!'

T

The Leader Desk

ஏப்ரல் 9, 2025 • 12:52 PM

'ரணில் - ராஜபக்ஷ கூட்டணியில் கடத்தல் சூத்திரதாரி பிள்ளையான்!'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • மேலும், “ரணில் - ராஜபக்ச கூட்டணியுடன் இணைந்து கடத்தல் குற்றச்சாட்டுக்களிலும் ஈடுபட்டுள்ளார்.
  • நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “கிழக்கில் உள்ள அனேகமான புத்திஜீவிகள் காணாமல் போயுள்ளனர். இவ்வாறான கடத்தல்களின் சூத்திரதாரியாக கருதி பிள்ளையான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி அப்போதைய அரசாங்கத்துடன் இணைந்து பல குற்றங்களை பிள்ளையான் செய்துள்ளார்” என்றார்.

மேலும், “ரணில் - ராஜபக்ச கூட்டணியுடன் இணைந்து கடத்தல் குற்றச்சாட்டுக்களிலும் ஈடுபட்டுள்ளார். அவ்வாறான ஒரு சூத்திரதாரி இந்த உயரிய சபையிலும் இருந்துள்ளார். யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்துக்கு இவர்கள் போன்றோர் எந்த அபிவிருத்தியையும் செய்யவில்லை. இது போலவே பலரால் எமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது அதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை எமது அரசாங்கம் முன்னெடுத்தள்ளது” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...