Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பிள்ளையான் கைதுக்கான காரணம் இதுதான்!

T

The Leader Desk

ஏப்ரல் 9, 2025 • 4:51 AM

பிள்ளையான் கைதுக்கான காரணம் இதுதான்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சந்திரகாந்தன் (பிள்ளையான்) நேற்று திடீரென கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
  • இந்நிலையில் பிள்ளையானின் காரணத்தை பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.
  • களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இளைஞர்களினால் நேற்று (8) மாலை பட்டாசு கொழுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

சந்திரகாந்தன் (பிள்ளையான்) நேற்று திடீரென கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாவே பிள்ளையான் கைது செய்யப்பட்டார் என்று, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில், பிள்ளையான் தற்போது கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புபடுத்திய பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் நேற்றையதினம் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் பிள்ளையானின் காரணத்தை பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

இதேவேளை பிள்ளையான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடியில் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி வெளியிடப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இளைஞர்களினால் நேற்று (8) மாலை பட்டாசு கொழுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...