Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

முழு நாட்டுக்கும் மின்சாரம் இல்லாமல் போக என்ன காரணம்?

T

The Leader Desk

பிப்ரவரி 9, 2025 • 12:28 PM

முழு நாட்டுக்கும் மின்சாரம் இல்லாமல் போக என்ன காரணம்?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாணந்துறை உப மின் நிலையத்தின் மின்கட்டமைப்பில் குரங்கொன்று மோதியதன் காரணமாக நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.
  • பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாகத்தான், நாடு முழுவதும் மின் விநியோகத் தடை ஏற்பட்டதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
  • இந்த சம்பவம் மின் விநியோகத்தை பாதித்ததால் மின்சார விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

பாணந்துறை உப மின் நிலையத்தின் மின்கட்டமைப்பில் குரங்கொன்று மோதியதன் காரணமாக நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.

இந்த சம்பவம் மின் விநியோகத்தை பாதித்ததால் மின்சார விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், அமைச்சரின் கூற்றை வலுசக்தி அமைச்சு உறுதிப்படுத்தவில்லை. மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மின் தடைக்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாகத்தான், நாடு முழுவதும் மின் விநியோகத் தடை ஏற்பட்டதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்சினையால், தேசிய மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுடன் இணைந்து நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது.

மின்சார விநியோகத்தை மீட்டெடுக்கும் பணியில் ஊழியர்கள் செயற்பட்டு வருவதாகவும், திடீரென ஏற்பட்ட மின்வெட்டுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் மின்சக்தி அமைச்சு  தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

முழு நாட்டுக்கும் மின்சாரம் இல்லாமல் போக என்ன காரணம்? | Tamil Leader | We Lead the Nation