Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் பற்றி அரசியல் கட்சிகளுடன் பேச்சு!

T

The Leader Desk

பிப்ரவரி 9, 2025 • 4:03 AM

மாகாண சபைத் தேர்தல் பற்றி அரசியல் கட்சிகளுடன் பேச்சு!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
  • வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கும், தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
  • உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புத் திகதியை நிர்ணயிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புத் திகதியை நிர்ணயிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

"உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் புதிதாக வேட்புமனுக்களைக் கோரவுள்ளதால் ஆரம்பத்தில் இருந்து தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும். தேர்தல் பணிகளுக்குத் தேவையான நிதி திறைசேரியால் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, நிதி நெருக்கடி ஏதும் ஏற்படாது. உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தற்போது அவை விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு திகதியை நிர்ணயிக்க முடியும். வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கும், தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

ஆகவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ( விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் உறுதியான தீர்மானத்தை எடுக்க முடியும். மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு நாடாளுமன்றத்துக்கு உண்டு என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தியுள்ளோம்.

தேர்தல் முறைமை தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்களில் கலப்புத் தேர்தல் முறைமை குறித்து பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். எதிர்வரும் காலங்களில் அரசியல் கட்சிகளுடன் மாகாண சபைத் தேர்தல் குறித்து பேச்சில் ஈடுபடவுள்ளோம்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

காணப்படும் சட்ட சிக்கலுக்குத் தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், நாடாளுமன்றத்துக்கும் உண்டு" என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...