Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

‘ஃபொன்சேகா விடயத்தில் அப்போது நடந்துகொண்டது போது யோஷித விடயத்தில் அரசாங்கம் நடந்துகொள்ளாது’

T

The Leader Desk

பிப்ரவரி 9, 2025 • 3:56 AM

‘ஃபொன்சேகா விடயத்தில் அப்போது நடந்துகொண்டது போது யோஷித விடயத்தில் அரசாங்கம் நடந்துகொள்ளாது’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ராஜபக்ஷவைக் கைது செய்தபோது, சமூக ஊடகங்களில் ஏராளமான பொய்யான கதைகள் உருவாக்கப்பட்டன என்று, நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
  • “குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டால், வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.
  • பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அதில் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “சட்ட மா அதிபர் கூறுவது போல், ஒரு நபர் மீது குற்றம் சாட்டுவதற்கு முன்பு, அவர் முதலில் சந்தேகநபராக பெயரிடப்பட வேண்டும்.
எழுத்து அளவு:

ராஜபக்ஷவைக் கைது செய்தபோது, சமூக ஊடகங்களில் ஏராளமான பொய்யான கதைகள் உருவாக்கப்பட்டன என்று, நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் அதில் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“சட்ட மா அதிபர் கூறுவது போல், ஒரு நபர் மீது குற்றம் சாட்டுவதற்கு முன்பு, அவர் முதலில் சந்தேகநபராக பெயரிடப்பட வேண்டும். ஒருவரைக் கைது செய்யாமல், அவரை சந்தேக நபராகப் பெயரிட முடியாது. யோஷித ராஜபக்ஷ தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை அதுதான்.

“ஒருவருக்குப் பிணை வழங்கப்பட்டதால், குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார் எனக் கூற முடியாது. ஆனால், நமது மக்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த அறிவு இல்லாததால் ஒருவர் பிணையில் வெளிவரும் போது, அவர்கள் வழக்கில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டதாக நினைக்கின்றார்கள். அதனால்தான் எம்மீது விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

“குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டால், வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். இதில் எமது தலையீடுகள் எதுவும் இருக்காது. ஆனால், இவற்றை அரசியல் பழிவாங்கல்  என்று காண்பிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இது அரசியல் பழிவாங்கல் அல்ல.

“சட்டச் செயற்பாடுகளில் நாம் எவ்வித அழுத்தங்களையம் பிரயோகிப்பதில்லை. கடந்த காலங்களில் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா போன்றோர் விடயத்தில் முன்னைய அரசாங்கம் எவ்வாறு நடந்து கொண்டது என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம். ஆனால், எமது அரசாங்கம் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டிய எந்தத் தேவையும் இல்லை.

“விசாரணைகளில் யாராவது குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்து தொடர்புடைய சட்ட நடவடிக்கை எடுப்பது சட்டமா அதிபரின் வேலை” என குறிப்பிட்டுள்ளார்.  

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘ஃபொன்சேகா விடயத்தில் அப்போது நடந்துகொண்டது போது யோஷித விடயத்தில் அரசாங்கம் நடந்துகொள்ளாது’ | Tamil Leader | We Lead the Nation