Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

அடுத்து சீனிப் பிரச்சினை: உற்பத்திக்கு பெயர் போன கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் இன்றைய நிலை!

T

The Leader Desk

ஜூன் 8, 2025 • 4:49 AM

அடுத்து சீனிப் பிரச்சினை: உற்பத்திக்கு பெயர் போன கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் இன்றைய நிலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சீனி இறக்குமதிக்கான வரியை அதிகரிப்பதற்கான கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தச் சூழ்நிலை உருவாகி வருகிறது.
  • இரண்டு உள்ளுர் சீனி தொழிற்சாலைகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வாக தற்போது இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கான 50 ரூபாய் இறக்குமதி வரியை 80 ரூபாயாக உயர்த்துவதற்கான யோசனை திறைசேரிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
  • தவிர, ஓரளவு முன்னெடுக்கப்பட்ட உற்பத்தியும், நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலைப் பிரச்சினைகளால் பெருமளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.
  • அந்தவகையில், 1993ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டுள்ள கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் தற்போதைய நிலைமை தொடர்பான புகைப்படங்கள் சில, “தமிழ்லீடர்” இணையத்தின் கண்களில் பட்டன.
எழுத்து அளவு:

பேசப்படுகிறது. சீனி இறக்குமதிக்கான வரியை அதிகரிப்பதற்கான கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தச் சூழ்நிலை உருவாகி வருகிறது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு அறவிடப்படும் வரியை 30 ரூபாவினால் அதிகரிக்க திறைசேரி தயாராகி வரும் நிலையில், சுமார் 60,000 மெற்றிக் தொன் சீனியை மறைத்து பாரிய இலாபம் ஈட்டும் நோக்கில் இறக்குமதியாளர்கள் குழுவொன்று செயற்பட்டு வருவதாக, புறக்கோட்டை மொத்த வியாபர நிலையங்களின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு உள்ளுர் சீனி தொழிற்சாலைகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வாக தற்போது இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கான 50 ரூபாய் இறக்குமதி வரியை 80 ரூபாயாக உயர்த்துவதற்கான யோசனை திறைசேரிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போதுள்ள இறக்குமதி வரியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அதிகளவிலான சீனியை பின்னர் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் பாரியளவிலான இறக்குமதியாளர்கள் மறைத்து வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறக்குமதி வரி, கிலோவுக்கு 80 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதையடுத்து, அதற்கேற்ப சீனியின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் அதிகரிக்கும் எனவும், குறைந்த வரியின் கீழ் அதிகளவிலான சீனியை அதிக விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் இறக்குமதியாளர்கள் பெருமளவு இலாபம் பெற முடியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தச் சீனி கையிருப்புகளை மறைத்தமை தொடர்பில் மற்றுமொரு இறக்குமதியாளர்கள் குழு நுகர்வோர் அதிகாரசபையிடம் முறைப்பாடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் அண்மைய நாட்களில், உப்புக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வந்தது. இன்றைக்கும் அந்தப் பிரச்சினை முடிந்தபாடில்லை. இலங்கையிலும் உப்பு உற்பத்தில் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், நாட்டின் தேவைக்கு ஏற்ற உப்பை இலங்கையில் உற்பத்தி செய்ய முடியாதுள்ளது. தவிர, ஓரளவு முன்னெடுக்கப்பட்ட உற்பத்தியும், நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலைப் பிரச்சினைகளால் பெருமளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.

இவ்வாறானதொரு பிரச்சினையே தற்போது சீனிக்கும் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பல சீனித் தொழிற்சாலைகள் காணப்படுகின்ற போதிலும், முறையான முகாமைத்துவமின்மையால், சீனி உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளது.

அந்தவகையில், 1993ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டுள்ள கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் தற்போதைய நிலைமை தொடர்பான புகைப்படங்கள் சில, “தமிழ்லீடர்” இணையத்தின் கண்களில் பட்டன. கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, ஓரிரு தினங்களுக்கு முன்னர் அங்கு கள ஆய்வில் ஈடுபட்டபோது, இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த தொழிற்சாலை, சுமார் 22,000 ஏக்கர் நிலத்தை சொந்தமாகக் கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதி, தற்காலிகமாக விவசாயிகளுக்கு சோளம் உற்பத்திக்காக வழங்கப்பட்டுள்ளது.

அதனால் அங்கு மீண்டும் கரும்பு உற்பத்தியை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கும், இந்த நிலத்தின் ஒரு பகுதியை அப்பகுதியில் மேற்கொள்ளக்கூடிய பிற தொழில்களுக்கு விடுவிப்பதற்குமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Kan_6.jpg

 

Kan_5.jpg

 

Kan_4.jpg

 

Kan_3.jpg

 

Kan_2.jpg

 

Kan_1.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...