Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

2ஆவது நாளாக இன்றும் கறுப்புப் புகை: புனித பாப்பரசர் தெரிவில் இன்னும் தீர்மானமில்லை!

T

The Leader Desk

மே 8, 2025 • 12:54 PM

2ஆவது நாளாக இன்றும் கறுப்புப் புகை: புனித பாப்பரசர் தெரிவில் இன்னும் தீர்மானமில்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது, இரண்டாவது தடவையாகவும், 133 கர்தினால்களும் இன்னும் ஒரு பாப்பரசரை தேர்ந்தெடுக்கவில்லை என்பதை கத்தோலிக்க மக்களுக்கு அறிவித்துள்ளது.
  • புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாட்டின் இரண்டாவது நாள் அமர்வு இன்று (8) வத்திக்கானில் ஆரம்பமாகியுள்ளது.
  • இதன் நிமித்தம், 133 கத்தோலிக்க கர்தினால்கள், இரகசிய வாக்கெடுப்பு நடைபெறும் சிஸ்டைன் சேப்பல் மண்டபத்துக்குள் சென்றுள்ளார்கள் என்று வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • இது மறைந்த பாப்பரசர் பிரான்சிஸ்க்குப் பிறகு கர்தினால்கள், ஒரு புதிய பாப்பரசரை நேற்று தேர்ந்தெடுக்கவில்லை என்பதைக் குறிக்கும் வகையில் அமைந்திருந்தது.
எழுத்து அளவு:

இது, இரண்டாவது தடவையாகவும், 133 கர்தினால்களும் இன்னும் ஒரு பாப்பரசரை தேர்ந்தெடுக்கவில்லை என்பதை கத்தோலிக்க மக்களுக்கு அறிவித்துள்ளது.

புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாட்டின் இரண்டாவது நாள் அமர்வு இன்று (8) வத்திக்கானில் ஆரம்பமாகியுள்ளது.

இதன் நிமித்தம், 133 கத்தோலிக்க கர்தினால்கள், இரகசிய வாக்கெடுப்பு நடைபெறும் சிஸ்டைன் சேப்பல் மண்டபத்துக்குள் சென்றுள்ளார்கள் என்று வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநாட்டின் முதல் நாளான நேற்று புதன்கிழமை, சிஸ்டைன் சேப்பலின் புகைபோக்கியில் இருந்து கறுப்பு புகை வெளியேறியது.

இது மறைந்த பாப்பரசர் பிரான்சிஸ்க்குப் பிறகு கர்தினால்கள், ஒரு புதிய பாப்பரசரை நேற்று தேர்ந்தெடுக்கவில்லை என்பதைக் குறிக்கும் வகையில் அமைந்திருந்தது.

இந்தநிலையில் குறித்த தெரிவுத் தேர்தலினபோது, புதிய பாப்பரசராக தெரிவாகும் ஒருவருக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவை என்பது நியதியாகும். பாரம்பரியத்தின் படி, நேற்று ஒரு சுற்று வாக்களிப்பு நடந்தது.

இன்று மற்றும் அதைத் தொடர்ந்து வரும் நாட்களில் ஒரு புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஒவ்வொரு நாளும் நான்கு சுற்று வாக்களிப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...