Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

EXCLUSIVE: சூடுபிடித்துள்ள கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: சம்பந்தப்பட்ட ஆசிரியர் புத்தளத்துக்கு இடமாற்றம்!

T

The Leader Desk

மே 8, 2025 • 11:41 AM

EXCLUSIVE: சூடுபிடித்துள்ள கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: சம்பந்தப்பட்ட ஆசிரியர் புத்தளத்துக்கு இடமாற்றம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆசிரியரை இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
  • அத்துடன், பாடசாலை அதிபருக்கு விளக்கமளிக்க விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
  • https://www.facebook.com/watch/?v=1261061065443613&rdid=4xMME3wc0fLABadb சமூக ஊடகத்தில் நீதியை தேட முடியாது.
எழுத்து அளவு:

ஆசிரியரை இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த மாணவியின் மரணத்துக்கு நீதி கோரியும் சம்பந்தப்பட்ட ஆசிரியரைக் கைது செய்யுமாறு வலியுறுத்தியும், கொழும்பில் இன்று பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மழைக்கு மத்தியில் ஊர்வலமாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதியிடம் மனுவொன்றையும் கையளித்துள்ளனரை்.

இந்நிலையில் அறிக்கையொன்றை விடுத்துள்ள கல்வி அமைச்சு, கல்வி அமைச்சின் விசாரணை நடவடிக்கையில் குறித்த பாடசாலை அதிபரை அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது என்றும் இதனையடுத்தே, ஆசிரியரை இடமாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன், பாடசாலை அதிபருக்கு விளக்கமளிக்க விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை சம்பவ இடத்துக்கு வருகை தந்த கல்வியமைச்சின் அதிகாரி ஒருவர், சம்பந்தப்பட்ட ஆசிரியர் புத்தளத்துக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் உரிய பொலிஸ் விசாரணை அறிக்கைகள் பெறப்பட்ட பிறகு அவரை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார தலைமையில் இதுபற்றிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், குறித்த விவகாரம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியுடன் தொடர்புடைய வீடியோ இணைப்புக்கள் வருமாறு,

கொட்டும் மழையிலும் தொடரும் போராட்டம்...

https://www.facebook.com/watch/?v=1261061065443613&rdid=4xMME3wc0fLABadb 

 

சமூக ஊடகத்தில் நீதியை தேட முடியாது.. பெற்றோர்கள் முறைப்பாடு தர இன்னும் வரவில்லை

https://www.facebook.com/watch/?v=1758569185006240&rdid=0jiw9g8xX9cY0aDW

 

சுயாதீனமான விசாரணை நடத்த வேண்டும்

https://www.facebook.com/watch/?v=1029132422054701&rdid=fiIjkF7w8CFMwYK1

 

மாணவிக்கு அப்படி சொன்னதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்

https://www.facebook.com/watch/?v=501158476320492&rdid=tzZFfahTsjS4xWnx

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...