Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இன்று மீனாட்சி திருக்கல்யாணம்: மதுரையில் இன்று கோலாகலமாக நடந்த ஈசன் – அம்மை திருவிழா!

T

The Leader Desk

மே 8, 2025 • 4:19 AM

இன்று மீனாட்சி திருக்கல்யாணம்: மதுரையில் இன்று கோலாகலமாக நடந்த ஈசன் – அம்மை திருவிழா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காதலினால் தேவர்கள் சம்மதத்துடன் திருக்கல்யாண வைபவ நிகழ்வு நடைபெறுவதாக புராணக் கதைகளில் சொல்லப்படுகின்றது.
  • சித்திரை திருவிழாவின் 10வது நாளில் மதுரையின் மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண நிகழ்விற்காக பரபரப்பாக தயாராகும்.
  • கல்யாண நாளில் அதிகாலையில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி, கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார்கள்.
எழுத்து அளவு:

காதலினால்  தேவர்கள் சம்மதத்துடன் திருக்கல்யாண வைபவ நிகழ்வு நடைபெறுவதாக புராணக் கதைகளில் சொல்லப்படுகின்றது. தற்பொழுது வரை அதனை மதுரை மாநகரில் சித்திரைத் திருவிழாவாக கொண்டாடி வருகின்றார்கள்.

பாண்டிய மண்ணின் இளவரசியான மதுரை மீனாட்சி வீரமும், தாய் பாசம் கொண்ட மதுரையின் மக்களின் பெண் தெய்வமாக சிறந்து விளங்குகின்றார். புராண கதைகளின் படி பாண்டிய மன்னனின் மகளாக பிறக்கும் மதுரை மீனாட்சி பட்டத்து இளவரசியாக பட்டம் சூட்டிய பிறகு தேசம் முழுவதும் தன் ஆளுகைக்கு உட்படுத்த திக்விஜயம் செய்கின்றாள். அப்பொழுது கையிலையில் போரிடும் பொழுது அங்கு ஈசனைக் கண்டு தனது பெண்மை வெளிப்பட அத்த தருணத்தில் இருந்து ஈசன் மீது காதல் கொண்டு அவரை ஏன் மணமுடிக்க வேண்டும் என்று எண்ணுகின்றாள்.

மீனாட்சியின் விருப்பத்தை நிறைவேற்ற ஈசனும் சௌந்திரபாண்டியனாக மதுரைக்கு வந்து மீனாட்சியை மணம் புரிந்துகொள்வார். அதை நினைவுகூரும் வகையில் தான் ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் சித்திரை மாதம் நடைபெற்று வருகிறது.

சித்திரை திருவிழாவின் 10வது நாளில் மதுரையின் மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண நிகழ்விற்காக பரபரப்பாக தயாராகும். கல்யாண நாளில் அதிகாலையில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி, கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு தரிசனம்  அளிப்பார்கள். பின்பு கோவிலில் உள்ள முத்துராமையர் மண்டபத்தில் தேவாதி தேவர்கள் ஒன்று கூடி, மீனாட்சி, சுந்தரேஸ்வரர்  திருமணத்தை பேசி முடிப்பதாக ஐதீகம்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நிச்சயக்கப்பட்டதும் இருவரும் பட்டு உடுத்தி நகை மற்றும் ஜடை அலங்காரத்துடன் திருமண மேடைக்கு எழுந்தருளுவார்கள். அப்பொழுது அங்கு உள்ள சுந்தரேஸ்வரரின் சார்பில் ஓர் அர்ச்சகர் மங்கல நாணை எடுத்துக் கொடுக்க, மீனாட்சி அம்மன் சார்பில் ஓர் அர்ச்சகர் மீனாட்சி அம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்க டும் டும் என்று மேல தாளங்களுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் விண் அதிர சீரும் சிறப்புமாக நடைபெறும்.

இப்படி தெய்வப் பெண்ணான மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் அதே நேரத்தில் மதுரை பெண்கள் அனைவருமே புது தாலிக் கயிறு மாற்றிக் கொள்வார்கள். இதன் மூலமாக மாங்கல்ய பலம்  கிடைத்ததற்கு சமம் என்று நம்பப்படுகின்றது. வெறும் கல்யாணத்தோடு மட்டுமல்லாமல் இந்நிகழ்வை காண வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு மதுரையில் உள்ள சேதுபதி பள்ளியில் விடிய விடிய வரும் மக்கள் அனைவருக்கும் வெற்றிலை பாக்குடன் விருந்து போட்டு வழியனுப்பு வைப்பார்கள்.

மதுரை மக்களும் நம்ம வீட்டு கல்யாணத்திற்கு மொய் வைக்காமல் இருந்தால் எப்படி என்று எண்ணி பல்லாயிரக்கணக்கான மக்களும் மீனாட்சிக்காக மொய் வைத்து விட்டு வயிறார சாப்பிட்டு விட்டு செல்வார்கள். இப்படி ஒரு ஊரின் முக்கிய தெய்வத்தை தங்களுடைய வீட்டில் ஒருவராக நினைக்கும் ஊர் என்றால் அது மதுரை மாநகரமே தவிர, மற்ற எந்த ஊர்களுக்கும் இப்படி ஒரு சிறப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-நியூஸ்18

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இன்று மீனாட்சி திருக்கல்யாணம்: மதுரையில் இன்று கோலாகலமாக நடந்த ஈசன் – அம்மை திருவிழா! | Tamil Leader | We Lead the Nation