Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பிள்ளையான் கைது!

T

The Leader Desk

ஏப்ரல் 8, 2025 • 3:33 PM

பிள்ளையான் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • மட்டக்களப்பு பகுதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து இன்றிரவு (08) பொலிஸாரினால் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • விடுதலைப் புலிகள் அமைப்பில் சிவநேசத்துரை சந்திரகாந்தன், பிள்ளையான் என அழைக்கப்பட்டார்.
  • ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தனது 16ஆவது வயதில் இணைந்த பிள்ளையான், முக்கிய தாக்குதல்களில் முன்னிலை வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எழுத்து அளவு:

இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பகுதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து இன்றிரவு (08) பொலிஸாரினால் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது சம்பவத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் உறுதி செய்தனர். கைது செய்யப்பட்டமைக்கான காரணம் கூறப்படாத நிலையில், பிள்ளையான் கொழும்புக்கு அழைத்து செல்லப்படவுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவினர் கட்சியினருக்கு அறிவித்துள்ளனர்.

சிவில் ஆடைகளில் வேன் ஒன்றில் வருகைத் தந்த பாதுகாப்பு அதிகாரிகளே இவ்வாறு பிள்ளையானை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் உள்ளிட்ட சில சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை, பிபிசி தமிழுக்கு சில தினங்களுக்கு முன்னர் வழங்கிய பேட்டியில், பிள்ளையான் மறுத்திருந்தார். இந்த நிலையில், காரணங்கள் குறிப்பிடப்படாது பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யார் இந்த பிள்ளையான்?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியாக சிவநேசத்துரை சந்திரகாந்தன் செயற்பட்டிருந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பில் சிவநேசத்துரை சந்திரகாந்தன், பிள்ளையான் என அழைக்கப்பட்டார்.

1990ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தனது 16ஆவது வயதில் இணைந்த பிள்ளையான், முக்கிய தாக்குதல்களில் முன்னிலை வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதியாக விளங்கிய கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் கைகோர்த்து 2004ஆம் ஆண்டு புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த பிள்ளையான், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்திருந்தார்.

இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஆரம்பித்து அதனை இன்று வரை செயற்படுத்தி வருகின்றார்.

வடகிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டதன் பின்னர், கிழக்கு மாகாணத்திற்காக நடத்தப்பட்ட முதலாவது மாகாண சபைத் தேர்தலில் முதலாவது கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையான் 2008ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பிள்ளையான் மீது முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அவர் 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிறைச்சாலையில் இருந்தவாறே போட்டியிட்ட பிள்ளையான், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

அதன்பின்னர் 2020ஆம் ஆண்டு நீதிமன்றத்தினால் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இவ்வாறான நிலையிலேயே, தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

- பிபிசி

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...