Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

வியாழேந்திரனுக்கும் சாமர சம்பத்துக்கும் பிணை!

T

The Leader Desk

ஏப்ரல் 8, 2025 • 9:30 AM

வியாழேந்திரனுக்கும் சாமர சம்பத்துக்கும் பிணை!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எஸ்.வியாழேந்திரனை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மார்ச் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
  • இதன்போது ஏப்ரல் 01ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
  • அதனையடுத்து அவர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
எழுத்து அளவு:

எஸ்.வியாழேந்திரனை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மார்ச் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இலஞ்சம் பெற்றுக் கொள்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் அவர் அன்று மாலை கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது ஏப்ரல் 01ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனையடுத்து அவர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

ஏப்ரல் 01ம் திகதி முன்னிலையாகிய போது எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார்.

அதனை தொடர்ந்து இன்றையதினம் (8) பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

2016ஆம் ஆண்டு ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த போது நடைபெற்ற மோசடி தொடர்பான வழக்கு வழக்கு இன்று (08) கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த நீதவான் பிணையில் செல்ல அனுமதித்ததோடு, சந்தேக நபர் வெளிநாடு செல்வதைத் தடை செய்யும் உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...