Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

​​முத்தையா முரளிதரனுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ள ஜம்மு காஷ்மீர் நிலம் ஒதுக்கீடு!

T

The Leader Desk

மார்ச் 8, 2025 • 4:15 PM

​​முத்தையா முரளிதரனுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ள ஜம்மு காஷ்மீர் நிலம் ஒதுக்கீடு!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜம்மு காஷ்மீர் - கதுவாவில் நிலம் ஒதுக்கப்பட்டது குறித்து, சி.பி.ஐ கட்சியின் உறுப்பினர் முகம்மட் யூசுப் தாரிகாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
  • இலங்கையின் முன்னாள் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு, கதுவாவில் 1,642 கோடி ரூபாய் மதிப்பிலான அலுமினிய கேன் உற்பத்தி மற்றும் பானங்கள் நிரப்பும் அலகு அமைக்க சுமார் 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்போது ஜம்மு மற்றும் காஷ்மீரிலும், அந்த வணிகம் விரிவடைந்து வருகிறது.
  • இதன்படி, நிலக் குத்தகை கடந்த ஆண்டு ஜூன் 14 அன்று கையெழுத்தானது.
எழுத்து அளவு:

ஜம்மு காஷ்மீர் - கதுவாவில் நிலம் ஒதுக்கப்பட்டது குறித்து, சி.பி.ஐ கட்சியின் உறுப்பினர் முகம்மட் யூசுப் தாரிகாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் தற்போதைய பத்தீட்டு கூட்டத்தொடரின் போது, அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். இந்த நில ஒதுக்கீட்டின் சட்டப்பூர்வ அடிப்படை குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

இலங்கையின் முன்னாள் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு, கதுவாவில் 1,642 கோடி ரூபாய் மதிப்பிலான அலுமினிய கேன் உற்பத்தி மற்றும் பானங்கள் நிரப்பும் அலகு அமைக்க சுமார் 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது நிறுவனமான சிலோன் பெவரேஜஸ், ஏற்கனவே கர்நாடகாவில் ஒரு ஆலையைக் கொண்டுள்ளது. இப்போது ஜம்மு மற்றும் காஷ்மீரிலும், அந்த வணிகம் விரிவடைந்து வருகிறது. இதன்படி, நிலக் குத்தகை கடந்த ஆண்டு ஜூன் 14 அன்று கையெழுத்தானது.

இந்தநிலையில், குறித்த பிரச்சினை, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நில ஒதுக்கீட்டு கொள்கைகள், குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்பான விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது.

எனவே, எதிர்க்கட்சித் தலைவர்கள் நில ஒதுக்கீட்டு செயல்பாட்டில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கோருகின்றனர்.இதனால் அரசியல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த பிரச்சினையாக, இது மாறியுள்ளது.

இதேவேளை, சட்டசபை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விவசாய உற்பத்தி அமைச்சர் ஜாவைத் அகமது டார் இந்த விடயத்தை ஒப்புக்கொண்டார். எனினும், குறித்த நிலம் வருவாய்த் துறையின் அதிகார வரம்பிற்குள் வருவதாக அவர் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...