Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

500,000ஐ கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!

T

The Leader Desk

மார்ச் 8, 2025 • 3:19 PM

500,000ஐ கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எண்ணிக்கை 500,000ஐ கடந்துள்ளது.
  • ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 3 மில்லியன் ஆக உயர்த்துவதே இலங்கை சுற்றுலாப் பணியகத்தின் நோக்கமாகும்.
  • அந்தத் துறையில் நம்பிக்கையை மேலும் தூண்டும் வகையில், 2025ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 500,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்ததுள்ளமை விசேட அம்சமாகும்.
  • ஜனவரி 1 முதல் மார்ச் 5, வரை 530,746 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

எண்ணிக்கை 500,000ஐ கடந்துள்ளது.

2025ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 3 மில்லியன் ஆக உயர்த்துவதே இலங்கை சுற்றுலாப் பணியகத்தின் நோக்கமாகும்.

இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முக்கிய வருமான ஆதாரமான சுற்றுலாத் துறை தற்போது குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டி வருகிறது.

2024ஆம் ஆண்டில் இரண்டு மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் இலக்கு எதிர்பார்த்தபடி அடையப்பட்டது.

அந்தத் துறையில் நம்பிக்கையை மேலும் தூண்டும் வகையில், 2025ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 500,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்ததுள்ளமை விசேட அம்சமாகும்.

2025 ஜனவரி 1 முதல் மார்ச் 5, வரை 530,746 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளான 84,476 பேர், அயல் நாடான இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் இரண்டாவது பெரிய குழு ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், 70,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அதில் அடங்கியுள்ளனர்.

மூன்றாவது பெரிய குழுவான 50,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருகை தந்துள்ளனர்.

மேலும், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் மார்ச் மாதத்தின் முதல் 5 நாட்களில் மட்டும் வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 37,768 ஆகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...