Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

ஆஸியின் யுனைடெட் பெட்ரோலியம் ஏன் தனது செயற்பாடுகளை இலங்கையில் நிறுத்தியது?

T

The Leader Desk

பிப்ரவரி 8, 2025 • 5:08 PM

ஆஸியின் யுனைடெட் பெட்ரோலியம் ஏன் தனது செயற்பாடுகளை இலங்கையில் நிறுத்தியது?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதன்படி, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து அந்த நிறுவனம் நாட்டில் இயங்கவில்லை என்று கூறப்படுகிறது.
  • ஒவ்வொரு நிறுவனத்திற்கும் நாட்டில் தலா 150 எரிபொருள் நிலையங்கள் என்ற வகையில் 450 எரிபொருள் நிலையங்களை இயக்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.
  • எனினும் அவுஸ்திரேலிய நிறுவனம் அதன் செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
  • அந்த ஒப்பந்தத்தின்படி, யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் சுமார் 20 ஆண்டுகளுக்கு நாட்டில் எரிபொருள் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்த போதும், ஒரு வருடத்திற்குள் அவர்கள் நாட்டில் செயல்பாடுகளை நிறுத்திவிட்டனர் என்பது விசேட அம்சமாகும்.
எழுத்து அளவு:

அதன்படி, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து அந்த நிறுவனம் நாட்டில் இயங்கவில்லை என்று கூறப்படுகிறது.

வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டினுள் எரிபொருட்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை கடந்த அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.

அதன்படி, சீனாவின் சினோபெக் நிறுவனம், அமெரிக்காவின் ஆர்.எம்.பார்க்ஸ், மற்றும் அவஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனங்கள் நாட்டில் செயல்பாடுகளைத் தொடங்கியது.

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் நாட்டில் தலா 150 எரிபொருள் நிலையங்கள் என்ற வகையில் 450 எரிபொருள் நிலையங்களை இயக்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

சினோபெக் மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் தற்போது நாட்டில் எரிபொருள் விற்பனையை எந்த பிரச்சினையும் இல்லாமல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அவுஸ்திரேலிய நிறுவனம் அதன் செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தில் ஏற்பட்ட சிக்கலான சூழ்நிலை காரணமாக அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த ஒப்பந்தத்தின்படி, யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் சுமார் 20 ஆண்டுகளுக்கு நாட்டில் எரிபொருள் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்த போதும், ஒரு வருடத்திற்குள் அவர்கள் நாட்டில் செயல்பாடுகளை நிறுத்திவிட்டனர் என்பது விசேட அம்சமாகும்.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் செயல்பாடுகளை நிறுத்துவதாக கடிதம் மூலம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அதன் ஊழியர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...