Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

சட்டமா அதிபர் மீது அரசியல் அழுத்தம் வேண்டாம்!

T

The Leader Desk

பிப்ரவரி 8, 2025 • 10:29 AM

சட்டமா அதிபர் மீது அரசியல் அழுத்தம் வேண்டாம்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
  • ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கின் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்வது குறித்த சட்ட மா அதிபரின் பரிந்துரையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அரசாங்கம் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
  • இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு சட்டத்தரணிகள் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
எழுத்து அளவு:

என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு சட்டத்தரணிகள் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

குறித்த கடிதத்தில், சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் தொடர்பில் அமைச்சரவையோ அரசியல் தலைமைகளோ தலையீடு செய்யக் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம் சட்டத்தின் சுயாதீனத்தன்மை சவாலுக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கின் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்வது குறித்த சட்ட மா அதிபரின் பரிந்துரையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அரசாங்கம் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களம் விசாரணைகளின் அடிப்படையில் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியுமா இல்லையா என்பதனை நிர்ணயம் செய்வதாகத் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையானது முழுக்க முழுக்க சட்டத்தின் அடிப்படையிலானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைகள் குறித்து உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் எனவும் இந்த விவகாரத்தில் அமைச்சரவையோ அரசியல் தலைமைகளோ தலையீடு செய்வது சட்டத்தின் நியாயதிக்கத்தை பாதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் பிரபல்யமான பொது நிலைப்பாடுகளின் அடிப்படையில் அன்றி சட்டத்தின் பிரகாரம் முன்வைக்கப்படுவதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...