Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

முகம்மது சாலி நழீம் எம்.பி மீது தாக்குதல்

T

The Leader Desk

பிப்ரவரி 8, 2025 • 8:10 AM

முகம்மது சாலி நழீம் எம்.பி மீது தாக்குதல்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முகம்மது சாலி நழீம் மீது இன்று (08) காலையில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் ஸ்ரீலங்கா மக்கள் கட்சி ஆதரவாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
  • இது தொடர்பாக காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் எமது செய்திளாரிடம் தெரிவிக்கையில், அரசியல் பிரச்சினை காரணமாக பள்ளிவாசல் ஒன்றின் முன்னாள் எனது தந்தைக்கும் சகோதரர் மீதும் இன்று அதிகாலை 6.00 மணியளவில் கலீல் என்பர் தாக்குதல் நடத்தினார்.
  • இதனால் காயமடைந்த சகோதரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து காலையில் கொழும்பில் இருந்து வந்த தாம் வைத்தியசாலைக்கு சென்ற நிலையில், ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி ஆதரவாளர் காதர் என்பவர் வைத்தியசாலையில் வைத்து என்னை தரக்குறைவான வார்தைகளால் பேசினார்.
எழுத்து அளவு:

முகம்மது சாலி நழீம் மீது இன்று (08) காலையில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் ஸ்ரீலங்கா மக்கள் கட்சி ஆதரவாளர் ஒருவர்  தாக்குதல்  நடத்தியுள்ளார்.

இந்நிலையில், அவர் காயமடைந்து ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பாக காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர்  முகம்மது சாலி நழீம் எமது செய்திளாரிடம் தெரிவிக்கையில்,

அரசியல் பிரச்சினை காரணமாக பள்ளிவாசல் ஒன்றின் முன்னாள் எனது தந்தைக்கும் சகோதரர் மீதும் இன்று அதிகாலை 6.00 மணியளவில்  கலீல் என்பர் தாக்குதல் நடத்தினார்.

இதனால் காயமடைந்த சகோதரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து காலையில் கொழும்பில் இருந்து வந்த தாம் வைத்தியசாலைக்கு சென்ற நிலையில், ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி  ஆதரவாளர் காதர் என்பவர் வைத்தியசாலையில் வைத்து என்னை தரக்குறைவான வார்தைகளால் பேசினார்.

இதனையடுத்து நான் பொலிஸ் நிலையத்துக்கு சென்று வாகனத்தைவிட்டு இறங்கி உள்ள சென்ற போது, பின்னால் வந்த காதர் என் மீது மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளதுடன், பொலிஸ் நிலையத்துக்குள்ளும் தாக்க முற்பட்டபோது பொலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர் என்றார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் அப்படி ஒன்றும் நடக்கவில்லை இருவரும் முரண்பட்டு கொண்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...