Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிரான உத்தரவு; அபாயமாகும் ட்ரம்பின் முடிவு

T

The Leader Desk

பிப்ரவரி 8, 2025 • 3:37 AM

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிரான உத்தரவு; அபாயமாகும் ட்ரம்பின் முடிவு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடுமையான குற்றங்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது என 79 நாடுகளின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
  • நீதிமன்றத்தின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் (79 நாடுகள்) குழு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு தமது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர்.
  • பின்னணி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எழுத்து அளவு:

கடுமையான குற்றங்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது என 79 நாடுகளின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் (79 நாடுகள்) குழு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு தமது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதன்படி இஸ்ரேலை விசாரிப்பதற்கான நீதிமன்றத்தை உத்தரவுக்கு எதிராக ட்ரம்ப் கையெழுத்திட்ட விவகாரம் சர்வதேச சட்டத்தை பலவீனப்படுத்தும் என்றும் கூறியுள்ளனர்.

உலகளாவிய ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு

மேலும், உலகளாவிய ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு மிக முக்கியமான சர்வதேச சட்டத்தின் ஆட்சியை இது அச்சுறுத்துவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பில் ஸ்லோவேனியா, லக்சம்பர்க், மெக்ஸிகோ, சியரா லியோன் தலைமையிலான அதிகாரிகள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் மேற்படி விடயங்கள் கூறப்பட்டுள்ளது.

பின்னணி

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேலை குறிவைத்து தொடர் விசாரணைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ள நிலையில் குறித்த விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இது தொடர்பில் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தகவலின்படி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பிடியானை பிறப்பித்திருப்பதன் மூலம் தனது அதிகாரத்தை நீதிமன்றம் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் புதிய உத்தரவு காரணமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நீதிமன்றத்தின் விசாரணைகளுக்கு உதவியதாகக் கருதப்படும் அனைவருக்கும் எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேல்

இவை வெளிப்படையாகவே அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

முன்னதாக காசாவை கையகப்படுத்தி பாலஸ்தீனியர்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப திட்டம் கொண்டிருப்பதாக ட்ரம்ப் அறிவித்து இருந்தார்.

எனினும் இது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிரான உத்தரவு; அபாயமாகும் ட்ரம்பின் முடிவு | Tamil Leader | We Lead the Nation