Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

‘லசந்தவின் கொலை தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை’

T

The Leader Desk

பிப்ரவரி 8, 2025 • 2:56 AM

‘லசந்தவின் கொலை தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேகநபர்கள், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அல்ல என்று சட்ட மா அதிபர் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • குறித்த அறிவித்தலில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது, “லசந்த விக்ரமதுங்க, கடந்த 2009ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
  • லசந்த படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
  • “சம்பவம் நடந்து ஆறு வருடங்களின் பின்னர், 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் லசந்தவின் சாரதியைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் இராணுவ சார்ஜண்ட் மேஜர் பிரேமானந்த் உதலாகம கைது செய்யப்பட்டிருந்தார்.
எழுத்து அளவு:

கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேகநபர்கள், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அல்ல என்று சட்ட மா அதிபர் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

லசந்த விக்ரமதுங்க ஓட்டிச் சென்ற வாகனத்திலிருந்து ஒரு ஆவணம் காணாமல் போனது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறை நடத்திய விசாரணையின் போது கைது செய்யப்பட்ட திஸ்ஸசிறி சுகதபால மற்றும் சிறிமேவன் பிரசன்ன நாணயக்கார ஆகியோருக்கு எதிராகக் குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அவர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளதாகவும் சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய ஆதாரங்களை வெளியிடுவதன் அடிப்படையில் குற்றவியல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதைப் பரிசீலிப்பதை இந்த வெளியீடு தடுக்காது என்றும் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தலில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது,

“லசந்த விக்ரமதுங்க, கடந்த 2009ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். லசந்த படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

“சம்பவம் நடந்து ஆறு வருடங்களின் பின்னர், 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் லசந்தவின் சாரதியைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் இராணுவ சார்ஜண்ட் மேஜர் பிரேமானந்த் உதலாகம கைது செய்யப்பட்டிருந்தார்.

“ஆனால், சாரதி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அதற்கு முன்னதாக எதுவித முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அத்துடன் அவரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட சட்டச் சிக்கல்களை கருத்திற்கொண்டு, அவரை வழக்கில் இருந்து விடுவிக்க தீர்மானிக்கப்பட்டது.

“அதேபோன்று, சாட்சியங்களை அழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளான திஸ்ஸசிறி சுகதபால மற்றும் பிரசன்ன நாணயக்கார ஆகியோருக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இல்லாத நிலையில் அவர்களையும் விடுதலை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...