Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

‘விடுதலைப் புலிகளின் பட்டியலில் மஹிந்தவின் பெயர் இல்லை!’

T

The Leader Desk

ஆகஸ்ட் 7, 2025 • 2:28 PM

‘விடுதலைப் புலிகளின் பட்டியலில் மஹிந்தவின் பெயர் இல்லை!’

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நடத்தினார்கள் மஹிந்தவுக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் 60 பேர் கொண்ட பாதுகாப்பு ஏற்பாடானது மிக அதிகம்.
  • அவரின் பாதுகாப்புப் படையணியை 30 பேரைக் கொண்டதாகக் குறைக்க வேண்டும் என்று ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
  • போர் தொடங்கும் முன்பே என் மீது தாக்குதல் நடத்தினர்.
  • நன்கு பயிற்சி வழங்கப்பட்ட 30 பேர் மஹிந்தவின் பாதுகாப்புக்குப் போதும்.
எழுத்து அளவு:

நடத்தினார்கள் மஹிந்தவுக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் 60 பேர் கொண்ட பாதுகாப்பு ஏற்பாடானது மிக அதிகம். அவரின் பாதுகாப்புப் படையணியை 30 பேரைக் கொண்டதாகக் குறைக்க வேண்டும் என்று ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மஹிந்தவுக்கு பாதுகாப்புக் குறைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் கூறுகின்றனர். ஆனால், அவருக்குத் தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கூட மிகவும் அதிகம் என்றே நான் கூறுவேன்.

“பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கத் தலைமைத்துவம் வழங்கினார் என்பதற்காக மகிந்த மீது புலிகள் ஒருபோதும் தாக்குதல் நடத்தவில்லை. தாக்குதல் நடத்துவதற்கு முயற்சியும் எடுக்கவில்லை. புலிகளின் கொலைப்பட்டியலில்கூட மஹிந்தவின் பெயர் இருக்கவில்லை.

“புலிகள் என் மீதே தாக்குதல் நடத்தினார்கள். போர் தொடங்கும் முன்பே என் மீது தாக்குதல் நடத்தினர். மஹிந்த வைத்திருந்த பாதுகாப்பு பிரிவில் அரைவாசிப் பேர் மனைவி கடைக்குச் செல்லும் போது பாதுகாப்பு வழங்குவதற்கும், பிள்ளைகள் விளையாடுவதற்கு பாதுகாப்பு வழங்குவதற்குமே பயன்படுத்தப்பட்டனர்.

“இது வெறும் பகட்டு. பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாமல் எதற்கு மஹிந்தவுக்கு இத்தனை பாதுகாப்பு. நன்கு பயிற்சி வழங்கப்பட்ட 30 பேர் மஹிந்தவின் பாதுகாப்புக்குப் போதும். நான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தால், 30 பேரைத்தான் பாதுகாப்புக்கு வழங்குவேன்.

“சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அமைச்சர்களுக்கு பாதுகாப்பில்லை. அவர்கள் மக்களோடு மக்களாக திரிகிறார்கள். அப்படியொரு நிலைமை எமது நாட்டிலும் வர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...