Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மன்னிப்பில் விடுதலையானவர் ஜனாதிபதி OK செய்த பட்டியலில் இல்லையாம்!

T

The Leader Desk

ஜூன் 7, 2025 • 2:02 PM

மன்னிப்பில் விடுதலையானவர் ஜனாதிபதி OK செய்த பட்டியலில் இல்லையாம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச்.
  • “அரசியலமைப்பின் 34 (1) பிரிவின் படி, கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
  • “இந்த சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் நேற்று (06) "ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக" என்ற தலைப்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
  • https://tamilleader.lk/news/15882-0706202501.
எழுத்து அளவு:

தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடு இருப்பதாகவும் வெளியான செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் கவனமெடுத்தள்ளது.

“அரசியலமைப்பின் 34 (1) பிரிவின் படி, கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளின் பட்டியல் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படும். இந்தப் பட்டியல் நீதி அமைச்சினால் பரிசீலிக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்படுகிறது. அதன்படி, ஜனாதிபதியின் அனுமதியுடன், குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.

“எவ்வாறாயினும்,மேற்குறித்த சம்பவத்திற்கு அமைவாக 2025-05-06 திகதியிடப்பட்ட மற்றும் (06/01 යෝජිත/ ජ.පො.සමා/ 05-12/2025) இலக்கத்தில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு கிடைக்க வேண்டியவர்களின் பெயர் பட்டியலில் 388 கைதிகளின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த்துடன், மேலும் அனுராதபுரம் சிறைச்சாலையில் நிதி மோசடி தொடர்பாக சிறையிடப்பட்ட நபரின் பெயர் அந்தப் பட்டியலில் எங்கும் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.அதாவது, ஜனாதிபதியால் பொது மன்னிப்புக்காக அனுமதிக்கப்பட்ட 388 பெயர்களில் அந்த நபரின் பெயர் சேர்க்கப்படவில்லை.

“இந்த சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் நேற்று (06) "ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக" என்ற தலைப்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்பான அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கைக்கு மாறாகவே, சிறைச்சாலைகள் திணைக்களத்தால் ஏற்கெனவே இது விடயத்தில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது.

“வெசாக் மன்னிப்பு விதிகளின் கீழ் அபராதம் தள்ளுபடி செய்யப்பட்டதால் அவருக்கு விடுதலை வழங்கப்பட்டது” என்றே, சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததது.

அந்த அறிக்கையின் முழுமையான உள்ளடக்கத்தை அறிய, கீழ்க் கண்ட லிங்க்கை அழுத்துங்கள்.

https://tamilleader.lk/news/15882-0706202501

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மன்னிப்பில் விடுதலையானவர் ஜனாதிபதி OK செய்த பட்டியலில் இல்லையாம்! | Tamil Leader | We Lead the Nation