Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

சவாலாகியுள்ள தேர்தல்: அரசாங்கம் ஆட்சியமைக்க யாரிடம் கையேந்தப் போகிறது?

T

The Leader Desk

மே 7, 2025 • 4:13 AM

சவாலாகியுள்ள தேர்தல்: அரசாங்கம் ஆட்சியமைக்க யாரிடம் கையேந்தப் போகிறது?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்று நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் கை ஓங்கிய அதேசமயம் தெற்கில் ஆளும் தேசிய மக்கள் சக்தி (திசை காட்டி சின்னக் கட்சி) முன்னணி நிலை பெற்றது.
  • உதாரணத்துக்கு கொழும்பு மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி 48 இடங்களை பெற்றிருக்கின்றது.
  • ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து 69 இடங்களை தக்க வைத்திருக்கின்றன.
  • இந்தப் பின்புலத்தில் கொழும்பு மாநகர சபை மேயர் பதவியை ஆளும் தேசிய மக்கள் சக்தி பெறுவது நெருக்கடியானது என சுட்டிக்காட்டப்படுகிறது.
எழுத்து அளவு:

நேற்று நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் கை ஓங்கிய அதேசமயம் தெற்கில் ஆளும் தேசிய மக்கள் சக்தி (திசை காட்டி சின்னக் கட்சி) முன்னணி நிலை பெற்றது.

ஆயினும் இருநூறுக்கும் மேலான சபைகளில் ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றுவதற்கான தனித்து அறுதிப்பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளவில்லை.

இந்தப் பின்புலத்தில் எதிர்க்கட்சிகள் தமக்குள் ஒன்று சேர்ந்து அந்தச் சபைகளில் நிர்வாகத்தை கைப்பற்றும் நிலையும், தனித்து அதிக ஆசனங்களை பெற்ற தேசிய மக்கள் சக்தி, அச்சபைகளில் எதிர்க்கட்சியில் அமரும் சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கின்றன.

உதாரணத்துக்கு கொழும்பு மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி 48 இடங்களை பெற்றிருக்கின்றது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து 69 இடங்களை தக்க வைத்திருக்கின்றன. இந்தப் பின்புலத்தில் கொழும்பு மாநகர சபை மேயர் பதவியை ஆளும் தேசிய மக்கள் சக்தி பெறுவது நெருக்கடியானது என சுட்டிக்காட்டப்படுகிறது.

பிரதான எதிர்க்கட்சிகளளான ஐக்கிய மக்கள் சக்தி 29 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 13 இடங்களையும் அங்கு பெற்றுள்ளன. ஏனைய இடங்களை பல சிறிய கட்சிகள் ஒன்று சேர்ந்து பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்தப் பின்புலத்தில் கொழும்பு மாநகர சபையின் கூட்டத்தில் இடம்பெறும் வாக்கெடுப்பின் மூலமே மேயர் தேர்வு நடைபெறும் எனத் தெரிகிறது.

எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் ஒன்றிணைந்து கொழும்பு மாநகர மேயரைத் தெரிவு செய்யக்கூடிய சூழல் இருக்கின்றது. தென்னிலங்கையில் இதுதான் பல இடங்களிலும் நிலைமை.

தனித்து அதிக ஆசனங்களை எடுத்த தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய இக்கட்டு.நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியையும், நாடாளுமன்றத்தில் வலிமையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையையும் ஆளும் தேசிய மக்கள் சக்தி வைத்திருக்கின்ற காரணத்தினால், நாட்டின் எதிர்க்கட்சிகள் அதற்கு எதிராக விரும்பியோ விரும்பாமலோ தங்களுக்குள் ஒன்றுபட்டு, உள்ளூராட்சி சபைகளை ஆளுந்தரப்புக்கு கிடைக்காமல் செய்வதில் கவனமாக இருக்கும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

-முரசு

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சவாலாகியுள்ள தேர்தல்: அரசாங்கம் ஆட்சியமைக்க யாரிடம் கையேந்தப் போகிறது? | Tamil Leader | We Lead the Nation