Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

வடக்கு மாகாணத்தில் குறைந்தளவு சனத்தொகை!

T

The Leader Desk

ஏப்ரல் 7, 2025 • 1:54 PM

வடக்கு மாகாணத்தில் குறைந்தளவு சனத்தொகை!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வசதிகள் தொகைமதிப்பு 2024' அறிக்கை இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
  • ஆம் ஆண்டுக்கான குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகை மதிப்பு கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 ஆகும்.
  • இறுதியாக 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் சனத்தொகை 14 இலட்சம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
  • ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாகிய 15ஆவது தேசிய சனத்தொகை கணக்கெடுப்பு 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இரண்டாவது வாரம் நிறைவு செய்யப்பட்டது.
எழுத்து அளவு:

வசதிகள் தொகைமதிப்பு 2024' அறிக்கை இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டுக்கான குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகை மதிப்பு கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 ஆகும்.

இறுதியாக 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் சனத்தொகை 14 இலட்சம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாகிய 15ஆவது தேசிய சனத்தொகை கணக்கெடுப்பு 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இரண்டாவது வாரம் நிறைவு செய்யப்பட்டது.

சனத்தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் சனத்தொகை வளர்ச்சியில் மந்தநிலை காணப்படுகின்றது. மேல் மாகாணம் அதிக சனத் தொகை கொண்ட மாகாணமாக உள்ளது, அங்கு மொத்த சனத் தொகையில் 28.1 சதவீதம் பேர் வசிக்கின்றனர்.

அதேவேளை, 5.3 சதவீதம் பேருடன் வடக்கு மாகாணம் குறைந்தளவான சனத்தொகையைக் கொண்ட மாகாணமாக உள்ளது. 24 இலட்சத்து 33 ஆயிரத்து 685 பேருடன் கம்பஹா மாவட்டம் சனத் தொகையில் முதலிடம் பிடித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து 23 இலட்சத்து 74 ஆயிரத்து 461 பேருடன் கொழும்பு மாவட்டம் அதிகளவான சனத் தொகையைக் கொண்டுள்ளது. குருநாகல், கண்டி, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் தலா 10 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் காணப்படுகின்றனர்.

மறுபுறம், வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு (ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 542), மன்னார் (ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 674), கிளிநொச்சி (ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 434) மற்றும் வவுனியா (ஒரு இலட்சத்து 72 ஆயிரத்து 257) ஆகிய மாவட்டங் கள் மிகக் குறைந்தளவான சனத்தொகை கொண்ட மாவட்டங்களாகத் தொடர்ந்து காணப்படுகின்றன.

முல்லைத்தீவு மாவட்டம் 2.23 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது, அதேவேளை வவுனியா 0.01 சதவீதத்துடன் மிகக் குறைந்த இடத்தைப் பிடித்துள்ளது.

கொழும்பு மாவட்டம் ஒரு சதுர கிலோமீற்றருக்கு 3 ஆயிரத்து 549 பேருடன் அதிக சனத் தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது. அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 50 நபர்கள் வசிக்கின்றார்கள்.

Sangananaya.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...