Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

மேர்வின் சில்வா கைது தொடர்பில் அவர் மனைவி வெளியிட்ட தகவல்!

T

The Leader Desk

மார்ச் 7, 2025 • 2:03 AM

மேர்வின் சில்வா கைது தொடர்பில் அவர் மனைவி வெளியிட்ட தகவல்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதுவரை எனக்கொரு தெளிவு இல்லை என அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
  • முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று முன்தினம் (05) இரவு கைது செய்யப்பட்டார்.
  • எனினும், இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றதாகவும் இது தொடர்பான சரியான விபரங்கள் எனக்கு தெரியாது எனவும் மேர்வின் சில்வாவின் மனைவி கூறியுள்ளார்.
  • நாங்கள் வீட்டில் இருந்த போது, அடையாள அட்டையை காட்டிய 4 பேர் அவரை கைது செய்து அழைத்து சென்றதாக அவர் கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

இதுவரை எனக்கொரு தெளிவு இல்லை என அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று முன்தினம் (05) இரவு கைது செய்யப்பட்டார்.

அவர் மக்கள் தொடர்பு அமைச்சராக இருந்த காலப்பகுதியில் களனி பிரதேசத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியொன்று, அவரால் போலியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.

இதன்படியே, அவர் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும், இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றதாகவும் இது தொடர்பான சரியான விபரங்கள் எனக்கு தெரியாது எனவும் மேர்வின் சில்வாவின் மனைவி கூறியுள்ளார்.

நாங்கள் வீட்டில் இருந்த போது, அடையாள அட்டையை காட்டிய 4 பேர் அவரை கைது செய்து அழைத்து சென்றதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை மேர்வின் சில்வாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டதைத் தொடர்ந்து அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைத்துச் சென்ற நிலையில், மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை மார்ச் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...