Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

லசந்த படுகொலை; புதிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய பரிசீலனை!

T

The Leader Desk

பிப்ரவரி 7, 2025 • 7:45 AM

லசந்த படுகொலை; புதிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய பரிசீலனை!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புதிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய பரிசீலனை செய்யவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
  • ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை சம்பவத்திற்கு உரிய நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என பிரதமர் தெரிவித்தார்.
  • அத்துடன் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க விவகாரம் குறித்து ஒரு நாள் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்தத் தயார் என்றும் இன்று பாராளுமன்றத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

புதிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய பரிசீலனை செய்யவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அத்துடன் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க விவகாரம் குறித்து ஒரு நாள் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்தத் தயார் என்றும் இன்று பாராளுமன்றத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

லசங்த விக்கிரமதுங்கவின் கொலை சம்பவத்தில் தற்போது அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை தெளிவுபடுத்துமாறும் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தை தொடர்ந்து, எவ்வாறான நடவடிக்கைகளை பிரதமர் முன்னெடுத்துள்ளார் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வினவியிருந்தார்.

இதேநேரம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளித்திருந்தார்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை சம்பவத்திற்கு உரிய நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என பிரதமர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் பல சாட்சியங்கள் உள்ளதாகவும் தாமும் அதற்குரிய பல்வேறுபட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார். 

லசந்த விக்கிரமதுங்கவின் மகள் முன்வைத்த கோரிக்கையை தாம் விளங்கிக்கொள்வதாகவும் கட்டாயம் நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

சட்ட மா அதிபர் திணைக்களம் சுதந்திரமாக செயற்பட வேண்டும் எனவும் இந்த கொலைச் சம்பவத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதாகவும் மீண்டும் இது தொடர்பிலான விடங்களை ஆராய்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

லசந்த படுகொலை; புதிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய பரிசீலனை! | Tamil Leader | We Lead the Nation